முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கும்பாபிஷேக பணிகள் எதிரொலி 9 நாட்களுக்கு தரிசனம் ரத்து திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

சனிக்கிழமை, 14 ஜூலை 2018      இந்தியா
Image Unavailable

திருப்பதி: திருப்பதி கோவிலில் 9 நாட்களுக்கு தரிசனம் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

திருப்பதி தேவஸ்தானம் கோவிலில் வெங்கடாஜலபதியை தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசிப்பது வழக்கம். கோடை விடுமுறை, தொடர் விடுமுறை, பிரம்மோற்சவம் ஆகிய நாட்களில் இந்த எண்ணிக்கை லட்சக்கணக்கை தாண்டும். ஏழுமலையானை இந்திய மக்கள், வெளிநாடு வாழ் இந்தியர்கள் என தரிசனம் செய்வது வழக்கம். சனி, ஞாயிறுகளில் நடைபாதை தரிசனம் அதிகரிப்பதால் தர்ம தரிசனம் பக்தர்கள் 24 மணி நேரங்களுக்கு மேல் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. இதை தடுக்க வெள்ளிக்கிழமை மாலை ஞாயிற்றுக்கிழமை வரை நடைபாதை தரிசனம் எனப்படும் திவ்ய தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருப்பதி கோயிலில் 9 நாட்கள் தரிசனத்திற்கு அனுமதியில்லை என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அதாவது ஆகஸ்ட் மாதம் 9-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை எந்த தரிசனத்திற்கும் அனுமதியில்லை. மேற்கண்ட காலகட்டத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தும் கும்பாபிஷேக பணிகள் நடைபெறுகிறது. இதனால் ஆகஸ்ட் 9 -ம் தேதி மாலை 6 மணி முதல் 17-ம் தேதி காலை 6 மணி வரை தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து