முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாரிசு அரசியல் நடத்தும் கட்சிகளுக்கு மக்கள் நலன் மீது அக்கறை இல்லை காங். மீது பிரதமர் மோடி மறைமுக தாக்கு

சனிக்கிழமை, 14 ஜூலை 2018      இந்தியா
Image Unavailable

வாரணாசி: வாரிசு அரசியல் நடத்தும் கட்சிகளுக்கு மக்கள் நலன் மீது அக்கறை இல்லை. மக்கள் நலனை குறிக்கோளாக கொண்டு செயல்படும் பா.ஜ.க.வால் மட்டுமே சிறப்பான நிர்வாகத்தை கொடுக்க முடியும். வளர்ச்சியை ஏற்படுத்த முடியும் என்று பிரதமர் மோடி உ.பி. மாநிலம் அசம்கரில் நடந்த எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பேசினார்.

மக்களவைத் தேர்தல் வரும் 2019-ம் ஆண்டு நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு, தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளில் பா.ஜ.க. தற்போதே ஈடுபடத் தொடங்கி விட்டது. அமித்ஷாவை தொடர்ந்து மக்களவைத் தேர்தலுக்கு கட்சித் தொண்டர்களைத் தயார்படுத்தும் விதமாக, பிரதமர் மோடியும் களத்தில் இறங்கியுள்ளார். நாடு முழுவதும் 50 பொதுக்கூட்டங்களில் பங்கேற்க பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார்.

இதன் ஒருபகுதியாக உத்தரப் பிரதேசத்தில் அவர் இரண்டு நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். அசம்கரில் நேற்று பூர்வாஞ்சல் எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசுகையில்,

மக்களுக்கு நலத் திட்டங்களை நிறைவேற்றுவதில் மத்திய அரசு தீவிர முனைப்புடன் இருந்து வருகிறது. உத்தரப் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் அளவு கடந்த 4 ஆண்டுகளில் இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. ஊழல் அற்ற மக்கள் நலன் சார்ந்த அரசாக மத்திய அரசாக மத்திய அரசு உள்ளது. மத்திய அரசு மட்டுமின்றி உத்தரப் பிரதேச மாநில பா.ஜ.க. அரசும் மக்கள் நலத்திட்டங்களை வேகமாக நிறைவேற்றி வருகிறது.
வாரிசு அரசியல் நடத்தும் கட்சிகளுக்கு மக்கள் நலன் மீது அக்கறை இல்லை. சொந்த குடும்ப நலனே அவர்களுக்கு முக்கியம். குடும்ப அரசியல், ஊழல் செய்யும் இந்த கட்சிகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து