முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென்ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: 278 ரன் வித்தியாசத்தில் இலங்கை அபார வெற்றி

சனிக்கிழமை, 14 ஜூலை 2018      விளையாட்டு
Image Unavailable

காலே : காலேயில் நடைபெற்று வந்த முதல் டெஸ்டில் சுழற்பந்து வீச்சால் தென்ஆப்பிரிக்காவை 278 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இலங்கை.

287 ரன்கள்...

இலங்கை - தென்ஆப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலேயில் 12-ம் தேதி தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை கருணாரத்னேயின் (158 அவுட்இல்லை) அபார சதத்தால் 287 ரன்கள் குவித்தது. பின்னர் தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சை தொடங்கியது. டு பிளிசிஸை (49) தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 126 ரன்னில் சுருண்டது. இதனால் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 161 ரன்கள் முன்னிலைப் பெற்றது. 161 ரன்கள் முன்னிலையுடன் இலங்கை அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது.

111 ரன்கள்...

முதல் இன்னிங்சில் சதம் அடித்த கருணாரத்னே 2-வது இன்னிங்சிலும் சிறப்பாக விளையாடினார். அவர் 60 ரன்கள் எடுத்தார். இவரது அரைசதத்தால் இலங்கை அணி 2-வது நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 111 ரன்கள் எடுத்திருந்தது. நேற்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது தென்ஆப்பிரிக்காவின் சுழற்பந்து வீச்சாளரான மகாராஜ் சிறப்பாக பந்து வீச இலங்கை அணி 2-வது இன்னிங்சில் 190 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் ரபாடா 3 விக்கெட்டும், மகாராஜ் 4 விக்கெட்டும் கைப்பற்றினார்.

352 ரன்கள் ....

ஒட்டுமொத்தமாக இலங்கை அணி 351 ரன்கள் அதிகம் பெற்றிருந்தது. இதனால் 352 ரன்கள் வெற்றி இலக்காக தென்ஆப்பிரிக்கா அணிக்கு நிர்ணயித்தது இலங்கை. காலே மைதானத்தில் 352 ரன்கள் என்பது இமாலய இலக்காகும். இந்த இலக்கை நோக்கி தென்ஆப்பிரிக்கா அணி களம் இறங்கியது. ஆனால் தில்ருவான், ஹெராத் சுழற்பந்து வீச்சில் சிக்கி தென்ஆப்பிரிக்கா 73 ரன்னில் ஆல்அவுட் ஆனது. இதனால் இலங்கை 278 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தில்ருவான் 6 விக்கெட்டும், ஹெராத் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். இரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கொழும்பில் 20-ந்தேதி தொடங்குகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து