முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2018 -கால்பந்து உலகக்கோப்பையை வெல்லப்போவது யார் ? இறுதிப் போட்டியில் இன்று பிரான்ஸ் - குரோஷியா மோதல்

சனிக்கிழமை, 14 ஜூலை 2018      விளையாட்டு
Image Unavailable

மாஸ்கோ : உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் கோப்பையை வெல்ல பிரான்ஸ் - குரோஷியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

உலக கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ்-குரோஷியா அணிகள் இன்று இரவு 8.30 மணிக்கு மாஸ்கோவில் நடக்கும் போட்டியில் மோதுகின்றன. தொடர்ந்து 4-வது முறையாக ஐரோப்பா கண்டத்தை சேர்ந்த ஒரு அணி மகுடம் சூடப்போகிறது.

பயமில்லை

பிரான்சை எதிர்கொள்வது குறித்து குரோஷிய அணி பயிற்சியாளர் ஜட்கோ டாலிச் கூறும் போது, ‘குரோஷிய அணியால் இதை விட இன்னும் சிறப்பாக செயல்பட முடியும். பிரான்ஸ் அபாயகரமான ஒரு அணி. ஆனால் லயோனல் மெஸ்சி (அர்ஜென்டினா), எரிக்சன் (டென்மார்க்), ஹாரி கேன் (இங்கிலாந்து) ஆகியோரை எங்களால் கட்டுப்படுத்த முடிகிறது என்றால், அதே வழியில் பிரான்சின் முன்னணி வீரர்கள் கைலியன் பாப்பே, கிரிஸ்மான் (தலா 3 கோல் அடித்துள்ளனர்) ஆகியோரின் ஆதிக்கத்தையும் தடுத்து நிறுத்த முடியும். அவர்களை கண்டு எங்களுக்கு பயமில்லை’ என்றார்.

நடுவர் நியமனம்

இதற்கிடையே, இறுதிப் போட்டிக்கான நடுவராக அர்ஜென்டினாவின் 43 வயதான நெஸ்டர் பிட்டானா நியமிக்கப்பட்டு இருக்கிறார். இவர் ஏற்கனவே இந்த உலக கோப்பையில் 4 ஆட்டங்களில் நடுவராக செயல்பட்டு உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து