முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிபர் தேர்தலில் தலையீடு: 12 ரஷ்ய உளவு அதிகாரிகள் மீது அமெரிக்கா குற்றச்சாட்டு பதிவு

ஞாயிற்றுக்கிழமை, 15 ஜூலை 2018      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்: கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில், அப்போதைய குடியரசுக் கட்சி வேட்பாளரான டிரம்ப்புக்கு ஆதரவான சூழலை ஏற்படுத்தும் வகையில் தலையீடு செய்ததாக 12 ரஷ்ய உளவுத் துறை அதிகாரிகள் மீது அமெரிக்க நீதித் துறை குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட 29 பக்க குற்றப் பதிவு ஆவணத்தில் கூறப்பட்டுள்ளதாவது,
ஜி.ஆர்.யூ என்றழைக்கப்படும் ரஷ்ய உளவுப் பிரிவு, கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் வாக்களர்களின் மனநிலையில் மாற்றம் ஏற்படுத்துவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டது. இணையதளம் வழியாக ஊடுருவிய அந்த உளவுப் பிரிவினர், அப்போதைய அதிபர் வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனின் பிரச்சார அலுவலகம் மற்றும் அவர் சார்ந்த ஜனநாயகக் கட்சியின் அலுவலக ஆவணங்களையும், மின் அஞ்சல்களையும் திருடினர். எனவே, இணையதளம் மூலம் ஊடுருவி தேர்தலில் தலையீடு செய்ததாக ரஷ்ய உளவுப் பிரிவைச் சேர்ந்த 12 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்படுகிறது.

எனினும், இந்தக் குற்றத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த யாருக்கும் தொடர்பு இருப்பதாக தெரியவரவில்லை. எனவே, இதுதொடர்பாக எந்த அமெரிக்கர் மீதும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படவில்லை என்று அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது ரஷ்ய உளவுப் பிரிவு அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து