முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராகுல் காந்தி மீதான விமர்சனம்: நிர்மலா சீதாராமனுக்கு ப. சிதம்பரம் பதிலடி

ஞாயிற்றுக்கிழமை, 15 ஜூலை 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: காங்கிரஸ் முஸ்லிம்களின் கட்சி என ராகுல் காந்தி தெரிவித்ததாக வெளியான செய்தியை முன்னிறுத்தி பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் விமர்சனங்களை முன்வைத்திருந்த நிலையில், அவற்றுக்கு மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் பதிலடி கொடுத்துள்ளார்.

முஸ்லிம் பிரதிநிதிகளை ராகுல் சந்தித்தது தொடர்பாக உருது பத்திரிகை ஒன்று அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தது. அந்தச் சந்திப்பின்போது காங்கிரஸ் முஸ்லிம்களின் கட்சி என ராகுல் கூறியதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், இதைத் திட்டவட்டமாக மறுத்த காங்கிரஸ் கட்சி, அந்தச் செய்தியை வதந்தி எனத் தெரிவித்தது. மேலும், காங்கிரஸ் 132 கோடி மக்களுக்கான கட்சி என்றும் விளக்கமளித்தது. இதனிடையே, இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், உருது பத்திரிகை வெளியிட்ட செய்தி பற்றி ராகுல் விளக்கமளிக்க வேண்டும் என்றார்.

இந்நிலையில், அதற்கு பதிலளிக்கும் விதமாக ப.சிதம்பரம் வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், பாகிஸ்தானை அடிபணிய வைத்து, பயங்கரவாதத்தை முற்றிலுமாக வேரறுத்து, ஊடுருவல் சம்பவங்களை முழுமையாக தடுத்து நிறுத்தி, ரபேல் போர் விமானங்களையும் வெற்றிகரமாக கொள்முதல் செய்து விட்டபடியால் தற்போது பாதுகாப்புத் துறை அமைச்சருக்கு நிறைய நேரம் கிடைக்கிறது. அதனால்தான் அனைத்து கட்சிகளையும், தனிநபர்களையும் மதரீதியான கோணத்தில் ஆய்வுக்குட்படுத்தி வருகிறார்.

மக்களவைத் தேர்தலின்போது கலவரத்தைத் தூண்ட சதித் திட்டங்கள் தீட்டப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். அதுகுறித்து அவர் வசம் உள்ள ரகசியங்களை மத்திய உள்துறை அமைச்சரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று அந்தப் பதிவில் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து