முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடக அணைகளில் இருந்து ஒரு லட்சம் கனஅடி நீர் திறப்பு காவிரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 15 ஜூலை 2018      இந்தியா
Image Unavailable

பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து ஒரு லட்சம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. சீறிப்பாய்ந்து வரும் இந்த நீர் இன்று மாலை மேட்டூரை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சேலத்தில் காவிரி கரையோர மக்களுக்கு அம்மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் கடந்த ஒரு மாதமாகவே நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக, கடந்த ஒரு வாரத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழை கொட்டியது. இதனால் அம்மாநிலத்தில் உள்ள கபினி அணை ஏற்கனவே நிரம்பி விட்டது. தற்போது அங்குள்ள கிருஷ்ணராஜ சாகர் மற்றும் ஹாரங்கி, ஹேமாவதி அணைகளும் நிரம்பி விட்டன. ஏற்கனவே கபினி அணையில் இருந்து 40 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. தற்போது கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்தும் விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. ஆக மொத்தம் ஒரு லட்சம் கனஅடி நீர் கர்நாடக மாநில அணைகளில் இருந்து திறந்து விடப்படுவதால் காவிரியில் வெள்ள நீர் கரைபுரண்டு வந்து கொண்டிருக்கிறது. ஒகனேக்கல்லில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் அங்கு பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பரிசல் ஓட்டவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் நீர் மட்டம் தற்போது 84 அடியாக உள்ளது.

கர்நாடகத்தில் இருந்து ஒரு லட்சம் கன அடி வீதம் தண்ணீர் வருவதால் வெகுவிரைவில் மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அணையின் மொத்த கொள்ளளவு 120 அடியாகும். மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியை எட்டிய பிறகு அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே அறிவித்துள்ளார். அதன்படி ஓரிரு நாட்களில் அணையின் நீர்மட்டம் 90 அடியை எட்டலாம். அல்லது இன்றே கூட அணையின் நீர்மட்டம் 90 அடியை எட்டலாம். அப்படி எட்டும் பட்சத்தில் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுவது உறுதி. தற்போது அணையில் இருந்து குடிநீருக்காக ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்து வருவதால் காவிரியில் வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாவட்ட கலெக்டர் ரோஹிணி, கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்று விட வேண்டும் என்றும் கூறிய அவர், கர்நாடக அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் நாளை(இன்று) மேட்டூரை வந்தடையும் என்றும் தெரிவித்தார். மேட்டூருக்கு அதிக நீர் வருவதால் டெல்டா பாசன விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சி வெள்ளமும் கரைபுரண்டு ஓடுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து