முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானில் ஹபீஸ் சயீது கட்சிக்கு முகநூலில் தடை

திங்கட்கிழமை, 16 ஜூலை 2018      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் ஹஃபீஸ் சயீது கட்சிக்கு முகநூலில் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஊடகத் தகவல்கள் கூறியதாவது:

பாகிஸ்தானில் வரும் 25-ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில், ஹபீஸ் சயீதின் மில்லி முஸ்லீம் லீக் கட்சியின் ஆதரவாளர்களும் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில், அந்த கட்சியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோரின் முகநூல் கணக்குகளை பேஸ்புக் நிறுவனம் முடக்கியுள்ளது.

மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஜமாத் -உத்-தவா அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீதின் அரசியல் வாழ்க்கைக்கு இது பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது என்று அந்த ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து பேஸ்புக் தலைமைச் செயல் அதிகாரி மார்க் ஸகர்பெர்க் கூறியதாவது:

முகநூல் சமூக வலைதளம் நேர்மறையான பிரசாரங்களுக்கு ஆதரவளிப்பதை உறுதிப்படுத்துவதே எங்களின் முதன்மையான குறிக்கோள். அதேசமயம், பாகிஸ்தான், இந்தியா,பிரேசில், மெக்ஸிகோ உள்ளிட்ட இதர நாடுகளில் வரவிருக்கும் தேர்தல்களில் குறுக்கீடுவதை தவிர்ப்பதையே விரும்புகிறோம் என்றார் அவர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து