முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரளாவில் 36 மணி நேரமாக பெய்து வரும் மழை:மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

திங்கட்கிழமை, 16 ஜூலை 2018      இந்தியா
Image Unavailable

திருவனந்தபுரம் : அண்டை மாநிலமான கேரளாவில் தொடர்ந்து 36 மணி நேரமாக பெய்து வரும் கன மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமை தொடங்கிய கன மழை வரும் புதன்கிழமை வரை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருப்பது மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

திருவனந்தபுரம் செல்லும் மங்களூர் விரைவு ரயில் பெட்டி மீது மரம் ஒன்று வேரோடு சாய்ந்ததில் ரயில் பெட்டிகள் சேதமடைந்தன. எனினும் இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. 3 மணி நேரம் தாமதமாக ரயில் புறப்பட்டுச் சென்றது.

கேரள மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த 36 மணி நேரமாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து சுமார் 3 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

8 மாவட்டங்களில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும் விடுமுறை அறிவித்துவிட்டன. நேற்று நடைபெற இருந்த பல்கலைக்கழகத் தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

ஆலப்புழா, இடுக்கி, கோழிக்கோடு, வயநாடு, கொல்லம், கொச்சி மாவட்டங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.

மழை மற்றும் வெள்ளம் காரணமாக 3 பேர் உயிரிழந்துள்ளனர். மலைப் பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து