முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்ரீ வில்லிபுத்தூர் வனபகுதியில் பலத்த சூறைகாற்று வீசியது.50க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதம்.

திங்கட்கிழமை, 16 ஜூலை 2018      விருதுநகர்
Image Unavailable

ஸ்ரீ வில்லிபுத்தூர் - விருதுநகர் மாவட்டம் ஸ்ரீ வில்லிபுத்தூர் வனபகுதியில் செண்பகத்தோப்பு பேச்சியம்மன் கோவில் உள்ளது. இங்கு திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்று கொண்டிருந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பூஜைகள் முடிந்த 5-வது நிமிடம் யாரும் எதிர்பாராதவிதமாக வனபகுதியில் திடீரென பெரும் சத்தத்துடன் சூறைகாற்று வீசியது. இதில் 100க்கும் மேற்பட்ட மரங்கள் ஒவ்வொன்றாக சரிந்தன. கோவிலுக்காக அமைக்கப்பட்டிருந்த மின்கம்பம் ஒடிந்து விழுந்தது. உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இந்த சூறைகாற்றினால் 100 ஆண்டு பழைமையான மரங்கள் வேரோடு சாய்ந்தன. மூலிகை செடிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டது. திருவிழாவிற்கு வந்த பக்தர்களுக்காக மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் சூறைகாற்று சமையல் கூடத்தையும், உணவருந்தும் இடத்தையும் சூறையாடியது. திருவிழாவிற்கு வந்திருந்த 50க்கும் மேற்பட்;ட வாகனங்கள் மீது மரங்கள் விழுந்;தன. பக்தர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். வாகனங்கள் மீது விழுந்த மரங்களை வனக்காவலர்களுடன் சேர்ந்து பொதுமக்களும் அகற்றினர். இது போன்ற ஒரு சூறாவளி காற்றை இதுவரை பாhத்ததில்லை என்று வனசரக அலுவலர்கள் தெரிவித்தனர். இத்தனை மரங்களை சாய்த்த சூறாவளி காற்றினால் பக்தர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பது அதிஸ்டவசமானது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து