முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாராட்டிய ரஜினிகாந்துக்கு செங்கோட்டையன் நன்றி

திங்கட்கிழமை, 16 ஜூலை 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : கல்வியில் தமிழகம் சிறப்பாக விளங்குகிறது என பாராட்டிய நடிகர் ரஜினிகாந்துக்கு அமைச்சர் செங்கோட்டையன் நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது,

பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அரசு பள்ளிகளில் அடுத்த 2019 ஆம் ஆண்டு முதல் ஆண்டு 12 ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் திறன் வளர்ப்பு பயிற்சி பாடம் கொண்டு வரப்பட உள்ளது.

இதன் மூலம் படித்து முடித்தவுடன் மாணவர்கள் வேலைவாய்ப்பு பெறுவார்கள். தமிழகத்திலுள்ள 32 மாவட்ட நூலகங்களில் கல்வித்துறை சார்பாக ஐ.ஏ.எஸ் அகாடமிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு சி.ஏ. என்கிற பட்டயக் கணக்காளர் கல்வி படிப்பதற்கு பயிற்சி அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.என்று அமைச்சர் கூறினார்.

முன்னதாக நேற்று செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், தமிழகத்தில் கல்வி வளர்ச்சி மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது சிறப்பாகவே இருக்கிறது. பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார் என்று பாராட்டியிருந்தார் என்பது குறிபிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து