முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திண்டுக்கல் சப்_கலெக்டர், டி.ஆர்.ஓ.கார்களை ஜப்தி செய்த கோர்ட் ஊழியர்கள்

திங்கட்கிழமை, 16 ஜூலை 2018      திண்டுக்கல்
Image Unavailable

திண்டுக்கல்,- நிலம் கையகப்படுத்தப்பட்டவருக்கு நிவாரண உதவி வழங்காததால் சப் கலெக்டர் மற்றும் வருவாய் அலுவலரின் கார்களை கோர்ட் ஊழியர்கள் ஜப்தி செய்ய வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் பாண்டியன் நகரைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மனைவி ரஞ்சிதம். இவர்களுக்கு சொந்தமான நிலம் 7 ஏக்கர் வேடப்பட்டியில்  உள்ளது. இந்த நிலத்தை கடந்த 1998ம் ஆண்டு ஆதிதிராவிடர் நலத்துறையினர் அலுவலக பயன்பாட்டிற்காக கையகப்படுத்தினர். இதற்கு ஈடாக ரூ.7 லட்சத்து 24 ஆயிரத்து 945 வழங்குவதாகவும் தெரிவித்தனர். ஆனால் ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் மட்டுமே வழங்கினர். மீதித்தொகையை வழங்கக் கோரி பாலகிருஷ்ணன் திண்டுக்கல் முதன்மை சார்பு  நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த  நீதிமன்றம் வட்டியுடன் சேர்த்து ரூ.25 லட்சம் வழங்க உத்தரவிட்டது. ஆனால் அந்த தொகையை வழங்கவில்லை. எனவே மீண்டும் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனையடுத்து மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் சப் கலெக்டர் அலுவலக பொருட்களை ஜப்தி செய்ய  நீதிபதி உத்தரவிட்டார்.
அதன்பேரில் மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் சப் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த கோர்ட் அமீனாக்கள் அங்கிருந்த கார்கள் மீது ஜப்தி நோட்டீசை ஒட்டினர். மேலும் அலுவலகத்தில் இருந்த கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருட்களையும் பறிமுதல் செய்ய ஜப்தி நோட்டீசை வழங்கினர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி மேலும் சில நாட்கள் அவகாசம் கேட்டனர். இதனால் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து