முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரையில் ஏழாம் ஆண்டு இளந்தமிழர் இலக்கியப்பட்டறையினை அமைச்சர் செல்லூர்.கே.ராஜூ குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்

திங்கட்கிழமை, 16 ஜூலை 2018      மதுரை
Image Unavailable

   மதுரை,-மதுரை மாவட்டம், உலகத்தமிழ்ச்சங்க பெருந்திட்ட வளாகத்தில் தமிழ்வளர்ச்சித்துறை சார்பில் ஏழாம் ஆண்டு இளந்தமிழர் இலக்கியப்பட்டறையினை  கூட்டுறவுத்துறை அமைச்சர்  செல்லூர்.கே.ராஜூ     குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து தெரிவிக்கையில்:
   அம்மா   கனவுத்திட்டமான இந்த இளந்தமிழர் இலக்கியப்பட்டறை 7ம் ஆண்டு துவக்க விழாவில் கலந்து கொள்வதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன்.  மாண்புமிகு அம்மா அவர்கள் 2012ம் ஆண்டு தமிழ்வளர்ச்சித்துறை ஆய்வின் போது ஆண்டுதோறும் 100 மாணவ, மாணவியர்களுக்கு இளந்தமிழர் இலக்கியப்பட்டறையின் மூலம் பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படும் என அறிவித்து அதற்காக ரூ.10 இலட்சம் ஒதுக்கி உத்தரவிட்டார்.  மதுரை மாவட்டத்தில் கடந்த 2012 முதல் தற்போது வரை 6 இளந்தமிழர் இலக்கியப்பட்டறையின் மூலம் 375 மாணவர்களுக்கு 200க்கும் மேற்பட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது.  7ம் ஆண்டு இளந்தமிழர் இலக்கியப்பட்டறை நேற்று  முதல் வருகின்ற 22.07.2018 வரை நடைபெறவுள்ளது.
  தென்பாண்டி நகரின் தலைநகரம், தமிழ்கலாச்சாரத்தின் தலைநகரமான மதுரையில் உலகம் போற்றும் உலகத்தமிழ்ச்சங்க வளாகத்தில் இப்பட்டறை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.  இப்பயிற்சி பட்டறையில் மாணவ, மாணவியர்களுக்கு எழுத்துப்பயிற்சி, பேச்சுப்பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகள் புலமை வாய்ந்த வல்லுநர்களை கொண்டு பயிற்சி அளிக்கப்படும்.  உலகம் போற்றுகின்ற தமிழ்கலாச்சாரத்தை மாணவ, மாணவிகள் தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என தெரிவித்தார். 
  இப்பயிற்சி பட்டறையின் மூலம் பயிற்சி பெறவுள்ள மாணவ, மாணவியர்களுக்கு  கூட்டுறவுத்துறை அமைச்சர்  பயிற்சி உபகரணங்களை வழங்கினார்.
  இந்நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் முனைவர்.கோ.விசயராகவன்  , மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது)  .இராஜசேகரன்  , நான்காம் தமிழ்ச்சங்கத்தலைவர்  .குமரன் சேதுபதி அவர்கள், மதுரை தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குநர் முனைவர்.க.பசும்பொன் அவர்கள் உள்ளிட்ட தமிழ் அறிஞர்கள், பொதுமக்கள், மாணவ, மாணவியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து