முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ.137.74 கோடியில் நெல்லை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் 9 புதிய மேம்பாலங்கள் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்

திங்கட்கிழமை, 16 ஜூலை 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : கடலூர், திருச்சி, தருமபுரி, திருப்பூர், ஈரோடு, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் 137 கோடியே 74 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 7 ஆற்றுப் பாலங்கள் மற்றும் 2 ரயில்வே மேம்பாலங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

புதிய பாலங்களை...

மாநிலத்தின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியில் சாலை உள்கட்டமைப்பு வசதிகளின் முக்கியத்துவத்தினை உணர்ந்து, பெருகிவரும் போக்குவரத்து தேவைக்கேற்ப சாலைகளின் கொள்ளளவை அதிகரிக்கவும், பாதுகாப்பான பயணத்தினை உறுதி செய்யவும், மாநிலம் முழுவதும் புதிய பாலங்களை கட்டுதல்,தேவையான பகுதிகளில் தரமான சாலைகள் அமைத்தல், சாலைகள் மற்றும் பாலங்களை பராமரித்தல், போன்ற பணிகளை அரசு முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது.

ரயில்வே மேம்பாலம்

அந்த வகையில், கோயம்புத்தூர் மாவட்டம், போத்தனூரில் 22 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள ரயில்வே மேம்பாலத்தினை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று காணொலிக்காட்சி மூலமாக பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். இப்புதிய ரயில்வே மேம்பாலத்தினால், போத்தனூர், வெள்ளாளூர், மேட்டூர், கோனவாய்க்கால் பாளையம், குறிச்சி மற்றும் செட்டிபாளையம் பகுதிகளைச் சேர்ந்தமக்கள் மிகவும் பயனடைவர். இரு வழித்தடமுள்ள இப்பாலம், வடக்கு கோயம்புத்தூர் -போத்தனூர் - செட்டிபாளையம் சாலையில் போக்குவரத்து நெருக்கடியை தீர்க்கும்.

கொள்ளிடம் ஆற்றின்...

மேலும், கடலூர் மாவட்டம், புவனகிரி அருகே 22 கோடியே 57 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வெள்ளாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலம், நந்திமங்கலம் – பூலாமேடு கிராமங்களுக்கு இடையே 7 கோடியே 32 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பழைய கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலம், திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருச்சிராப்பள்ளி எம்.எஸ்.பி கேம்ப் சாலை சந்திப்பில் 74 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இரயில்வே மேம்பாலத்தின் மதுரை மற்றும் பேருந்து நிலைய கிளைப் பகுதிகள், தருமபுரி மாவட்டம், குமாரசாமி பேட்டையில் 22 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இரயில்வே மேம்பாலத்தை திறந்து வைத்தார்.

7 ஆற்றுப்பாலங்கள்

திருப்பூர் மாவட்டம், வாளவாடி - தெற்குபூதனம் சாலையில் பழையூரில் 1 கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம், ஈரோடு மாவட்டம், நாகர்பாளையம் சாலையில் 1 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம், தூத்துக்குடி மாவட்டம், புளியங்குடி - சங்கரன்கோவில் - கழுகுமலை நாலாட்டின் புதூர் சாலையில் குமாரபுரத்தில் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம், பாளையங்கோட்டை - குறுக்குச்சாலை - குளத்தூர் - பந்தல்குடி அருப்புக்கோட்டை சாலையில் கொ.தளவாய்புரத்தில் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம், திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டை - பாவூர்சத்திரம் சாலையில் சுரண்டையில் 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம் என மொத்தம், 160 கோடியே 34 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 3 ரயில்வே மேம்பாலங்கள் மற்றும் 7 ஆற்றுப்பாலங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறை முகங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், நெடுஞ்சாலைத்துறை தலைமைப் பொறியாளர் திட்டங்கள் இராஜதுரைவேல்பாண்டியன், தலைமைப் பொறியாளர் (நபார்டு மற்றும் கிராமச் சாலைகள்) எம்.கே.செல்வன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து