முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெற்றோரை சரிவர கவனிக்காத பிள்ளைகளுக்கு 3 மாதம் ஜெயில் - அமைச்சர் சரோஜா எச்சரிக்கை

திங்கட்கிழமை, 16 ஜூலை 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : பெற்றோரை சரிவர கவனிக்காத பிள்ளைகளுக்கு 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று அமைச்சர் சரோஜா எச்சரித்துள்ளார்.

440 பயனாளிகளுக்கு...

மத்திய அரசின் சமூக நீதி மற்றும் மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ்செயல்படும் முதியோர் மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு, அன்றாடவாழ்க்கைக்கு தேவைப்படும் உபகரணங்களை வழங்கும் “இராஷ்டிரிய வயோ ஸ்ரீயோஜனா” திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சென்னை ராயபுரத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 440 பயனாளிகளுக்கு, 15 லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கப்பட்டது.

வேண்டுகோள்...

உதவிகளை வழங்கி அமைச்சர் வி.சரோஜா பேசும்போது.,

இளைய சமுதாயத்திற்கு தமிழக அரசு சார்பில் நான் ஒரு முக்கியமான வேண்டுகோளை நான் வைக்க விரும்புகிறேன். நீங்கள் வயதான தாய், தந்தை மற்றும் பிற உறவினர்களை அன்போடும், பரிவோடும் கவனித்து கொள்ள வேண்டும். இது உங்கள் தலையாய கடமையாகும். இவ்வாறு தங்கள் பிள்ளைகளால் உரிய கவனிப்பின்றி அவதிப்படும் முதியோர்களுக்காகவே தமிழக அரசால் உரிய சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி சிரமத்திற்குள்ளான முதியோர் மாவட்ட வருவாய் அலுவலர்களிடம் புகார் அளித்தால் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு அவர்களுக்கு நிவாரணம் ஏற்படுத்தி தரப்படும். பெற்றோரை சரிவர கவனிக்காத பிள்ளைகளுக்கு 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் எம்.பிக்கள் ஜெயவர்தன் ( தென்சென்னை) எஸ்.ஆர்.விஜயகுமார், (மத்திய சென்னை) டி.ஜி.வெங்கடேஷ்பாபு  (வடசென்னை), எம்.எல்.ஏ.க்கள் ஆர்.நடராஜ், விருகை வி.என்.ரவி, மாவட்ட கலெக்டர் அன்புச்செல்வன், வட்ட வருவாய் அலுவலர் கருணாகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து