முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொடைக்கானல் ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு

செவ்வாய்க்கிழமை, 17 ஜூலை 2018      திண்டுக்கல்
Image Unavailable

கொடைக்கானல்-- கொடைக்கானல் ரோட்டரி சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
 இதற்கான விழா கொடைக்கானல் கிளப் வளாகத்தில் நடந்தது. இந்த விழாவிற்கு ரோட்டரி சங்கத்தின் சர்வதேச இயக்குநர் சி. பாஸ்கர்  தலைமை தாங்கினார்.முன்னாள் மாவட்ட ஆளுநர் ஜே.சாம்பாபு முன்னிலை வகித்தார்.
 கொடைக்கானல் ரோட்டரி சங்கத்தின் புதிய தலைவராக குமார் அன் குமார் கட்டுமான நிறுவனத்தின் எம்.டி. எஸ். செல்வகுமார், செயலாளராக டி.ஜி அசோசியேட்ஸ் நிர்வாக இயக்குநர் ஜே. தனசேகர், பொருளாளராக ஜெயபிரசாத், ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். விழாவில் முன்னாள் தலைவர் ரோகன் சாம்பாபு, முன்னாள் செயலாளர் ராஜ்குமார், ஆகியோர் கடந்த ஆண்டு ரோட்டரி செயல்பாடுகள் பற்றி பேசினர். இந்த விழாவில் துணை கவர்னர் சாந்த சதீஸ், ரோட்டரி சங்க நிர்வாகிகள்,  ஆகாஸ் பில்டர்ஸ் ஸ்ரீதர், பாலாஜி கன்ஸ்ட்ரக்சன்ஸ் கருணாநிதி,சங்கர் சட்டர்ஜி, சுகுமார்,சன்னி,அம்மன் ரமேஷ்,ராபின், ஹேவ் எ ஹார்ட் பவுண்டேசன் இயக்குநர் ஹர்ஜானி சார்லஸ், மார்சல்,ஆம்ஸ்ட்ராங், கொடைக்கானல் முன்னாள் நகர் மன்றத் தலைவர் முகமது இப்ராகிம்,உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் கல்வி, தொழில், உள்ளிட்டவைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
 புதிய நிர்வாகிகளை ரோட்டரி சங்க சர்வதேச இயக்குநர் பாஸ்கர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். புதிய உறுப்பினர்களாக இணைந்தவர்களுக்கு  முன்னாள் ஆளுநர் சாம்பாபு இணைப்பு பேட்ச் அணிவித்தார். புதிய தலைவராக பொறுப்பேற்ற செல்வக்குமார் இந்த ஆண்டிற்கான புதிய செயல் திட்டங்களை பட்டியல் இட்டார்.
பட விளக்கம்: கொடைக்கானல் ரோட்டரி சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்றனர். தலைவர் செல்வக்குமார்,செயலாளர் தனசேகர்,சர்வதேச இயக்குநர் பாஸ்கர், முன்னாள் ஆளுநர் சாம்பாபு.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து