முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க கூட்டம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்

செவ்வாய்க்கிழமை, 17 ஜூலை 2018      மதுரை
Image Unavailable

  மதுரை,-தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்.
மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், அழகர்கோவிலில் தமிழ்நாடு அரசின் ஓராண்டு சாதனை விளக்க கூட்டம் நடைபெற்றது. இதில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்.
இந்த விழாவில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசும் போது கூறியதாவது:-
      அம்மா அவர்கள் இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் தான் நிர்வாகப்புரட்சியை ஏற்படுத்தி மக்கள் அரசை தேடி வரும் நிலையை மாற்றி, அரசு மக்களை தேடி சென்று மக்களுக்கு தேவையான நலத்திட்ட உதவிகளை அம்மா திட்டம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  அம்மா அவர்களின் வழியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பதவியேற்ற நாளான 16.02.2017 முதல் இன்றைய தேதி வரை அம்மா திட்ட முகாம்கள் 637 நடைபெற்றுள்ளன.  இம்முகாம் மூலம் மொத்தம் 24,010 மனுக்கள் பெறப்பட்டு, 11,823 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.  முதியோர் மற்றும் இதர உதவித்தொகைகள் வழங்கும் திட்டத்தின் கீழ் 11,714 பயனாளிகளுக்கு ரூ.1,17,14,000 மதிப்பிலும், உழவர் பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் 8748 பயனாளிகளுக்கு ரூ.5,64,88,570 மதிப்பிலும் உதவித்தொகைகள் வழங்கப்பட்டுள்ளன.
குடிமராமத்துப்பணியானது மக்களின் பங்களிப்புடன் மக்கள் திட்டமாக, மக்கள் இயக்கமாக மாற்றிய சாதனை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களையே சாரும்.  குடிமராமத்து திட்டத்தின் மூலம் அனைத்து கண்மாய்களும் தூர்வாரப்படும்.  மதுரை மாவட்டத்தில் முதற்கட்டமாக குடிமராமத்துப்பணிகள் 70 கண்மாய்களில் ரூ.5.29 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டன.இரண்டாம் கட்டமாக 128 பணிகளுக்காக மொத்தம் ரூ.31 கோடியே 12 இலட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.மதுரை மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்ட நீர்நிலைகளின் மொத்த எண்ணிக்கை 1194 இதில் வண்டல் மண் எடுக்கப்பட்ட நீர்நிலைகளின் எண்ணிக்கை 1194, அகற்றப்பட்ட மொத்த வண்டல் மண்ணின் அளவு 21,96,660 கன மீட்டர்கள், பயனடைந்த மொத்த விவசாயிகளின் எண்ணிக்கை 16,835 ஆகும்.   மேலும் இலவச வீட்டு மனை பட்டாக்கள் மொத்தம் 15,268 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
  ஜமாபந்தி 1426 பசலி ஆண்டில் 1580 மனுக்களுக்கும், ஜமாபந்தி 1427 பசலி ஆண்டில் 2650 மனுக்களுக்கும் தீர்வு காணப்பட்டுள்ளன. ஆன்லைன் மூலம் வழங்கப்படும் சான்றுகள் மொத்தம் 3,93,419 நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. பழங்குடியினர்களுக்கான சாதி சான்றுகள் முறையே மதுரை கோட்டத்தல் 181 பயனாளிகளுக்கும், உசிலம்பட்டி கோட்டத்தில் 40 பயனாளிகளுக்கும், மேலூர் கோட்டத்தில் 68 பயனாளிகளுக்கும் என மொத்தம் 289 சாதிச்சான்றுகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வருவாய்த்துறையின் சார்பில் 88 பயனாளிகளுக்கு ரூ.26,40,000 மதிப்பிலான இலவச வீட்டு மனைப்பட்டாக்களும், 26 பயனாளிகளுக்கு உட்பிரிவு செய்யப்பட்ட பட்டா மாறுதல்களுக்கான ஆணைகளும், 68 பயனாளிகளுக்கு முழுப்புலம் பட்டா மாறுதலுக்கான ஆணைகளும், 10 விவசாயிகளுக்கு வண்டல் மண் அள்ள அனுமதி வழங்குவதற்கான ஆணைகளும், 6 நபர்களுக்கு பிறப்புச்சான்றுகளும், 85 விவசாயிகளுக்கு சிறு, குறு விவசாயி சான்றுகளும், சமூக பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் 21 பயனாளிகளுக்கு இந்திராகாந்தி தேசிய முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளும், 11 பயனாளிகளுக்கு இந்திராகாந்தி தேசிய விதவை உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளும், 2 பயனாளிகளுக்கு இந்திராகாந்தி தேசிய மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளும், முதலமைச்சர் உழவர் பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் ஒரு பயனாளிக்கு இயற்கை மரணம் உதவித்தொகை ரூ.12,500க்கான காசோலையும், ஒரு பயனாளிக்கு முதிர்கன்னி உதவித்தொகை பெறுவதற்கான ஆணையும், 11 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளும், 2 பயனாளிகளுக்கு கல்வி உதவித்தொகை ரூ.6500க்கான காசோலையும். 3 பயனாளிகளுக்கு விதவை உதவித்தொகை பெறுவதற்கான ஆணையும், தொழிலாளர் நலத்துறையின் சார்பில் ஓய்வூதியம், மகப்பேறு உதவித்தொகை, திருமண உதவித்தொகை மற்றும் விபத்து மரண உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 100 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.8,20,000 மதிப்பிலான காசோலைகளும், ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.14 இலட்சம் மதிப்பில் முதலமைச்சரின் சூரியமின்சக்தியுடன் கூடிய பசுமை வீடுகளும், வேளாண்மைத்துறையின் சார்பில் 15 பயனாளிகளுக்கு ரூ.4800 மதிப்பில் வேளாண்மை இடுபொருட்களும், கால்நடைபராமரிப்புத்துறையின் சார்பில் ரூ.12,90,000 மதிப்பில் கால்நடை காப்பீட்டுத் திட்டம் 43 பயனாளிகளுக்கும் என மொத்தம் 501 பயனாளிகளுக்கு ரூ.62,25,800 மதிப்பிலான நலத்திட்டங்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் பி.பெரியபுள்ளான் (எ) செல்வம் (மேலூர்) அவர்கள், எஸ்.எஸ்.சரவணன் (மதுரை தெற்கு) அவர்கள், மேலூர் வருவாய் கோட்டாட்சியர் சிவகாமி,  கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் ஆர்.ராஜசேகரன், வட்டாட்சியர்கள் சோமசுந்தரசீனிவாசன் (மதுரை கிழக்கு), சரவணன் (மேலூர்)  உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து