முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி.என்.பி.எல். 7-வது லீக் போட்டி: திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் சவாலை முறியடிக்குமா லைகா கோவை கிங்ஸ் ?

செவ்வாய்க்கிழமை, 17 ஜூலை 2018      விளையாட்டு
Image Unavailable

நத்தம் : தமிழ்நாடு பிரீமியர் லீக் 2018 தொடரின் 7-வது லீக் போட்டி, திண்டுக்கல் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் இன்று நடக்கிறது. இதில் திண்டுக்கல் டிராகன் மற்றும் லைகா கோவை அணிகள் பலப்பரீட்ச்சை நடத்துகின்றன.

ஒரு வெற்றி - ஒரு தோல்வி....

திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை பொறுத்தவரை தொடரின் முதல் போட்டியில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியுடனான முதல் போட்டியில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. 172 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது. ஆர்.ரோஹித் 46, கேப்டன் அஸ்வின் 42, ஹரி நிஷாந்த் 41 என பேட்டிங்கில் அசத்தினர். இருந்தபோதும், அந்த அணி தோல்வி அடைந்தது. ஆனால், தோல்வியில் இருந்து மீண்டு வந்து சீசெம் மதுரை பாந்தர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த போட்டியில் கேப்டன் ஆர்.அஸ்வின் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். பேட்டிங்கில் ஜெகதீசன் 68 ரன்களும், ஆர்.விவேக் 70 ரன்களும் குவித்தனர். மேலும், அந்த அணியில் யாழ் அருண் மொழி, ஆர்.விவேக், ரோஹித், எம்.மொஹம்மது, ஜகதீசன், அனிருத் சீதா ராம் என நட்சத்திர பட்டாளமே உள்ளது.

சமபலத்துடன்...

அதே சமயம், லைகா கோவை கிங்ஸ் அணி இந்த தொடரின் முதல் போட்டியில் ஐட்ரீம் காரைக்குடி காளை அணியை சூப்பர் ஓவரில் வீழ்த்தி தனது முதல் வெற்றியை ருசித்தது. அந்த அணியின் கேப்டன் அபினவ் முகுந்த் 59 ரன்கள் குவித்திருந்தார். அஸ்வின் வெங்கட்ராமன் 34 ரன்கள் குவித்தார். பந்துவீச்சிலும் நடராஜன் மற்றும் எம்.பி.ராஜேஷ் இருவரும் சிறப்பாக செயல்பட்டனர். குறிப்பாக நடராஜன் சூப்பர் ஓவரில் திறமையாக பந்துவீசினார். மேலும், ஷாருக்கான், ஆர்.ரோஹித், அஸ்வின் வெங்கட்ராமன், ஆண்டனி தாஸ் போன்ற நட்சத்திர வீரர்கள் அணிக்கு பலம் சேர்க்க உள்ளனர்.

இரண்டு அணிகளும் ஏறக்குறைய சமமான அளவிலான பலத்துடன் களமிறங்குவதால் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இரு அணிகள் இடையேயான போட்டி திண்டுக்கல் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் இன்று இரவு 7.15 மணிக்கு நடக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து