முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கும்பல் கொலை சம்பவங்கள் தொடர்பாக 3 கவன ஈர்ப்பு தீர்மானங்கள் பாராளுமன்றத்தில் தாக்கல்

புதன்கிழமை, 18 ஜூலை 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி: இந்தியாவில் கடந்த சில நாட்களாக கும்பல் கொலை சம்பவங்கள் மிகவும் மோசமாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சமூக வலைதளங்களில் பரவும் செய்திகளை நம்பி குழந்தை கடத்தல் என தவறாக புரிந்துக் கொண்டு அரங்கேறும் கும்பல் கொலைகள் இந்தியாவின் டிரெண்டிங் போல் பல எச்சரிக்கைகளுக்கு பிறகும் தொடர்கிறது.

கவன ஈர்ப்பு தீர்மானம்
இந்நிலையில், பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது.  இந்தக் கூட்டத்தொடரில், கும்பல் கொலை விவகாரம் குறித்தான கவன ஈர்ப்பு தீர்மானங்கள் 3 கட்சிகளால் தனித்தனியாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முதலில் திரிணாமுல் காங்கிரஸ், இந்த விவகாரம் குறித்தான கவன ஈர்ப்பு தீர்மானத்தை மாநிலங்களவையில் தாக்கல் செய்தது. அதைத்தொடர்ந்து ராஷ்ட்ரிய ஜனதா தள மக்களவை உறுப்பினர் ஜேபி யாதவ், இதே விவகாரம் மீது மக்களவையில் கவன ஈர்ப்பு தீர்மானத்தை அளித்தார். இவர்களைத் தொடர்ந்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி ராஜா கும்பல் கொலை விவகாரம் மற்றும் சுவாமி அக்னிவேஷ் மீதான தாக்குதல் விவகாரம் என 2 விவகாரங்கள் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்துள்ளார்.  ஏற்கனவே, கும்பல் கொலை விவகாரத்தில் புதிய சட்டத்தை இயற்றுமாறு மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து