முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாநிலங்களவை உறுப்பினர்களாக நடன கலைஞர் சோனல் மன்சிங் உள்பட 7 பேர் பதவியேற்பு

புதன்கிழமை, 18 ஜூலை 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, பாராளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரில் மாநிலங்களவை உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்ட நடன கலைஞர் சோனல் மன்சிங், பேராசிரியர் ராகேஷ் சின்ஹா உள்பட 7 பேர் பதவியேற்றுக் கொண்டனர்.

பதவியேற்பு

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று காலை தொடங்கியது. கூட்டத்தொடரில் பங்கேற்க வந்த பிரதமர் மோடி முக்கிய மசோதாக்கள் குறித்து விவாதிக்க மத்திய அரசு தயாராக உள்ளது. எனவே எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில், நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் புதிய உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்ட பாரம்பரிய நடன கலைஞர் சோனல் மன்சிங், டெல்லியை சேர்ந்த பேராசிரியர் ராகேஷ் சின்ஹா, ஒடிசாவை சேர்ந்த சிற்பக் கலைஞர் ரகுநாத் மொஹபத்ரா ஆகியோர் நேற்று பதவியேற்றுக் கொண்டனர்.  மேலும், கேரளாவை சேர்ந்த சி.ஐ.டி.யு. மாநில பொது செயலாளர் எலமரம் கரீம், சிபிஐ பினாய் விஸ்வம், கேரள காங்கிரஸ் தலைவர் மாணி உள்பட மொத்தம் 7 பேர் பதவியேற்றுக் கொண்டனர். இவர்களுக்கு மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து