முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உசிலம்பட்டி எம்.எல்.ஏ. பா.நீதிபதி குடிமராமத்து பணிகளை துவக்கி வைத்தார்

புதன்கிழமை, 18 ஜூலை 2018      மதுரை
Image Unavailable

உசிலம்பட்டி - மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா போத்தம்பட்டி கண்மாயில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் மேம்பாடு செய்யும் பணியை உசிலம்பட்டி எம்.எல்.ஏ. பா.நீதிபதி   
துவக்கி வைத்தார். செயற்பொறியாளர் விஸ்வநாத், நீலாவதி, பாண்டியன், உதவி செயற்பொறியாளர்கள் ராதாகிருஷ்ணன், லெட்சுமணன் ஆகியோர் உடனிருந்தனர்.
   தமிழகம் முழுவதும் 1511 பொதுப்பணித்துறை கண்மாய்களை விவசாயிகள் பங்களிப்போடு குடிமராமத்து திட்டத்தில் ரூ.328,95 கோடி மதிப்பீட்டில்  புனரமைக்க நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதியில் குண்டாறு வடிநிலக்கோட்ட ஆளுகையின் கீழ் ரூ.388.30 இலட்சம் மதிப்பீட்டில் 20 கண்மாய்களில் குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவற்றில் போத்தம்பட்டி கண்மாயில் நடைபெறும் பணிகள் இன்று மாண்புமிகு உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அவர்களால் மேற்பார்வையிடப் படுகிறது.
    போத்தம்பட்டி கண்மாயின் 1650 மீட்டர் நீளமுள்ள கரையை பலப்படுத்துதல், வரத்து வாய்க்கால் மற்றும் கண்மாயின் கழுங்கு சீரமைக்கவும், விவசாயிகளின் கோரிக்கையின்படி ரூ.19.00 இலட்சங்களுக்கு மதிப்பீடு தயாரிக்கப்பட்டு 10மூ விவசாயிகள் பங்களிப்புடன் பதிவு பெற்ற போத்தம்பட்டி கண்மாய் விவசாயிகள் சங்கம் மூலம் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
      மேற்கண்ட பணிகள் செயல்படுத்தப்படுவதால் போத்தம்பட்டி கண்மாய் மூலம் பயன்பெறும் 39.06 ஹெக்டேர் பரப்பில் உள்ள விளை நிலங்கள் பாசன வசதி பெறும். முழை காலங்களில் பெறப்படும் மழை நீர் எந்தவித விரயமும் இன்றி போத்தம்பட்டி கண்மாயில் சேமிக்கப்படும்.
    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா வெள்ளிமலை அணைக்கட்டு, போத்தம்பட்டி கண்மாய், வகுரணி கண்மாய், பானா மூப்பன்பட்டி கண்மாய், வடுகபட்டி கண்மாய், ஆனையூர் பெரிய கண்மாய், திம்மநத்தம் கண்மாய், அல்லிகுண்டம் கண்மாய், மன்னார்குளம் கண்மாய் ஆகிய கண்மாய்களும், எழுமலை பெரிய கண்மாய், செம்பரணி கண்மாய், மொச்சிகுளம் கண்மாய், கணக்கன்குளம் கண்மாய், சொக்கநாதன் கண்மாய், திருமாணிக்கம் பெரிய கண்மாய், வண்டபுலி கண்மாய், குடிசேரி கண்மாய், பெரிய கட்டளை பெரிய கண்மாய், உட்பட 20 கண்மாய்கள் குடிமராமத்து திட்டத்தின்கீழ் மேம்பாடு செய்யும் பணிகள் துவக்கப்பட்டது.
      இந்நகழ்ச்சியில் கிராம நிர்வாக அலுவலர் வாசிமுத்து, உசிலை நகர் கழக செயலாளர் பூமா ராஜா, உக்கிரபாண்டி, நக்கலப்பட்டி போஸ், அன்பு.கே.சி.மா. மணிவண்ணன், வழக்கறிஞர் சுதாகர், தனிக்கொடி, ஜெயச்சந்திரன், கரும்பு உற்பத்தியாளர் சங்க மாவட்டத் தலைவர் கலை அழகன் மற்றும் அதிமுக நிர்வாகிகளும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து