முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமேஸ்வரம் கோயில் கோபுரத்தில் கலாம் சிலை: கிரிக்கெட் வீரர் கைஃப் ட்விட்டரில் பெருமிதம்

வியாழக்கிழமை, 19 ஜூலை 2018      தமிழகம்
Image Unavailable

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் கோயில் கோபுரத்தில் அப்துல் கலாம் சிலை வைக்கப்பட்டிருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, 'உண்மையான ஹீரோ. பார்ப்பதற்கே பெருமையாக உள்ளது' என கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இந்திய அணுசக்தித் துறை தலைவர், இஸ்ரோ தலைவர், ஏவுகணை நாயகன், இந்திய குடியரசுத் தலைவர்என பெரும் பதவிகள் வகித்த அப்துல் கலாம் இந்திய மக்களால் பெரிதும் போற்றப்படுபவர். தனது எளிமையான நடத்தையால் இந்திய மக்களின் உள்ளங்களைக் கொள்ளைகொண்ட கலாம், நேருவுக்குப் பின்னர் பள்ளிக் குழந்தைகளை அதிகம் நேசித்த தலைவரானார்.

இஸ்ரோ விஞ்ஞானியாக இருந்தபோதும், நாட்டின் முதல் குடிமகனாக விளங்கியபோதும் பள்ளிக் குழந்தைகளைச் சந்தித்து, அவர்களை கேள்வி கேட்கச்சொல்லி அதற்கு விடையளித்து ஊக்கப்படுத்தினார். கனவு காணுங்கள் என இளைய சமுதாயத்திற்கு வழிகாட்டியாக இருந்தார்.

ஆடம்பரமிக்க ஜனாதிபதி மாளிகையை, எளிமையான குடிலாக்கியவர் கலாம். தனது உறவினர்கள் தன்னைக்காண டெல்லி வந்தபோது தனது சம்பளப் பணத்திலிருந்து அவர்களுக்கான அத்தனை செலவையும் செய்தவர். நேர்மைக்கு எடுத்துக்காட்டான கலாம் மதச்சாற்பற்ற கொள்கையால் இந்தியாவின் அனைத்து மத மக்களுக்கும் சொந்தக்காரரானார்.

கடந்த 2015-ம் ஆண்டு கலாம் மறைந்தபோது நாடே அழுதது. கிராமம்தோறும் மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்ற கலாமைக் கவுரவப்படுத்தும் வகையில் அவரின் சொந்த ஊரான ராமேஸ்வரம் கோயில் கோபுரத்தில் சிலைகளுக்கிடையே கலாம் சிலையையும் வைத்துள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இது கிரிக்கெட் வீரர் முகமது கைஃபையும் கவர்ந்துள்ளது. இதனால் நெகிழ்ச்சி அடைந்த அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார். அவரது பதிவில் “இதனைப் பார்ப்பதற்கே அவ்வளவு அருமையாக உள்ளது. உண்மையான ஹீரோ. அனைவருக்கும் உத்வேகத்தை அளிப்பவர்” என்று பதிவிட்டுள்ளார்.

முகமது கைஃபின் ட்விட்டர் பதிவும் வைரலாகி வருகிறது. அவரது ட்விட்டருக்கு பதிலளித்துள்ள பலரும், ''இதுதான் இந்தியா, தமிழராக இருப்பதற்கு பெருமை அடைகிறோம், தமிழகத்தில் மட்டுமே உண்மையான மதச்சார்பின்மை உள்ளது'' எனப் பலரும் பதிவிட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து