முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அணு ஆயுதங்களை அழிக்க வட கொரியாவுக்கு காலக்கெடு நிர்ணயிக்கவில்லை: டிரம்ப்

வியாழக்கிழமை, 19 ஜூலை 2018      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்: வடகொரியா தன்னிடம் உள்ள அணு ஆயுதங்களை முழுமையாக அழிப்பதற்கு எவ்வித காலக்கெடுவும் நிர்ணயிக்கவில்லை என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப்-வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் இடையிலான சந்திப்பு சிங்கப்பூரில் நடைபெற்ற போது அமெரிக்கா - வட கொரியா இடையே புதிய நட்புறவை ஏற்படுத்துவது, கொரிய தீபகற்பத்தில் நிரந்தர அமைதி, ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த இரு நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்படுவது, கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதங்களற்ற பிரதேசமாக்குவது, போர் கைதிகளைப் பரிமாறிக் கொள்வது ஆகிய 4 அம்ச தீர்மானத்தில் இரு தலைவர்களும் கையெழுத்திட்டனர்.

இந்நிலையில் வாஷிங்டனில் செய்தியாளர்களைச் சந்தித்த அமெரிக்க அதிபர் டிரம்ப் இது தொடர்பாகக் கூறியதாவது:-
அணு ஆயுத ஒழிப்பு தொடர்பாக வடகொரியாவுடன் நடத்தி வரும் பேச்சுவார்த்தை சிறப்பாக உள்ளது. இந்தப் பேச்சுவார்த்தையை விரைவாக நடத்தி முடிக்க வேண்டும் என்று எந்த நிபந்தனையும் நாங்கள் விதித்துக் கொள்ளவில்லை. மேலும், அணு ஆயுதங்களை அழிக்க வட கொரியாவுக்கு காலக்கெடு எதையும் நாங்கள் விதிக்கவும் இல்லை என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து