முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சபரிமலை கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்க முடியாது- தேவஸ்தானம்

வியாழக்கிழமை, 19 ஜூலை 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி: சபரிமலை கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டில் தேவஸ்வம் போர்டு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

10 வயது முதல் 55 வயது வரையிலான பெண்களை சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனுமதிக்க சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதன் மீது நேற்று விசாரணை நடைபெற்றது.

அப்போது நீதிபதி கூறுகையில், இறை வழிபாட்டில் ஆண், பெண் என பாகுபாடு பார்க்கக் கூடாது. வழிபாடு நடத்த ஆண்களை போல் பெண்களுக்கும் உரிமை உள்ளது. பெண்களை கோயிலுக்குள் அனுமதிக்காதது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று நீதிபதி கூறினார். அப்போது கோயில் நிர்வாகம் தரப்பில், மாதவிடாய் காலத்தில் உள்ள 10 வயது முதல் 55 வயது வரையிலான பெண்களை கோயிலுக்குள் அனுமதித்தால் புனிதம் பாதிக்கப்படும். எனவே அவர்களை அனுமதிக்க இயலாது என்று தெரிவிக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து