முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அர்ப்பணிப்போடும் ஆர்வத்தோடும் பணி செய்தால் அந்த நிறுவனம் நிச்சயம் உயர்ந்த நிலையை அடையும் அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் பேச்சு

வியாழக்கிழமை, 19 ஜூலை 2018      சிவகங்கை
Image Unavailable

 காரைக்குடி.-காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் 2018-19-ம் கல்வியாண்டில் புதிதாக சேர்ந்த முதுகலை முதலாமாண்டு கலை மற்றும் அறிவியல் மாணவர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி இன்று  பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா கலையரங்கில் நடைபெற்றது. 
அழகப்பா பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேரா. நா.இராஜேந்திரன் அவர்கள் இந்நிகழ்ச்சிக்கு தலைமையேற்று உரைநிகழ்த்தினார். அவர் தமது உரையில், இந்த புத்தாக்கப் பயிற்சியின் நோக்கம் புதிதாக சேர்ந்துள்ள மாணவர்கள் இப்பல்கலைக்கழகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள பல்வேறு வசதிகளை அறிந்து கொண்டு அதன் மூலம் தங்களை மேம்படுத்திக்கொள்ள வழிவகை செய்வதே ஆகும் என்றார்.
அழகப்பா பல்கலைக்கழகம் தேசியத் தர நிர்ணயக் குழுவின் மூன்றாவது சுற்று தர மதிப்பீட்டில் அதிக புள்ளிகள் பெற்று தமிழகப் பல்கலைக்கழகங்களில் முன்னோடி பல்கலைக்கழகமாக இருப்பதோடு அகில இந்திய அளவில் அரசுப் பல்கலைக்கழகங்களில் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது. இப்பல்கலைக்கழகம் மிகவும் பின்தங்கிய பகுதியில் அமையப்பெற்றிருந்தாலும் உயர்கல்வியில் இந்திய அளவில் சிறந்த இடத்தை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது என்றார்.
ஒரு கல்வி நிறுவனம் சிறந்த நிறுவனமாக எப்போது கருதப்படும் என்றால் அங்கு பணியாற்றக்கூடிய ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் தரத்தைப் பொறுத்தே கருதப்படும்; என்றார். அர்ப்பணிப்போடும் ஆர்வத்தோடும் பணி செய்தால் அந்த நிறுவனம் நிச்சயம் உயர்ந்த நிலையை அடையும் என்பதில் எவ்வித சந்தேகம் இல்லை என்றார்.
அழகப்பா பல்கலைக்கழகம் ஏற்கனவே பெற்றுள்ள யூ தகுதியை தொடர்ந்து தக்க வைத்துக்கொள்வதற்கு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தொடர்ந்து தங்களது பங்களிப்பை அளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
இயற்கையாகவே மாணவர்களிடம் பல்வேறு திறன்கள் பொதிந்து கிடக்கிறது.  அவற்றை வெளிக்கொணர ஆசிரியர்கள் அவர்களுக்கு வழிகாட்ட வேண்டும் என்றார்.
படிப்பு என்பது தேர்வுக்காக படிப்பது ஆகும், கற்றல் என்பது வாழ்க்கைக்காக படிப்பது ஆகும் என்றார்.  மாணவர்கள் தங்களது முன்னேற்றத்திற்காக தொடர்ந்து கற்க வேண்டும். பாடம் சார்ந்த மற்றும் பாடத்தோடு தொடர்புடைய பிற செயல்பாடுகளிலும் மாணவர்கள் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.  மாணவர்கள் கட்டாயம் யோகா பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.  இதனால் தங்களது உடல் நலமும் மன நலமும் சீராக இருப்பதோடு கல்வியை சிறப்பாக கற்க முடியும் என்றார். மாணவர்கள் தாங்கள் ஒரு கல்வி கற்ற சமுதாயத்திலும் மற்றும் படைப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய தளத்திலும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை எப்போதும் நினைவில் கொண்டு தங்களை அதற்குத் தகுந்தார்போர் மேம்படுத்திக் கொள்ள வேண்டும்; என்று அவர்களைக் கேட்டுக்கொண்டார்.
பல்கலைக்கழக பதிவாளர் பேரா. ஹா.குருமல்லே~;பிரபு தமது வரவேற்புரையில் அழகப்பா பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட காலம் தொட்டு இன்று வரை நிகழ்த்திய பல்வேறு சாதனைகள் குறித்து விளக்கி கூறினார். 
கலைப்புல முதன்மையர் பேரா. க.மணிமேகலை, அறிவியல் புல முதன்மையர் பேரா. ஜி.பரிதிமாற்கலைஞன், கல்வியியல் புல முதன்மையர் பூ. தர்மலிங்கம், மைய நூலகர் முனைவர் எ.திருநாவுக்கரசு, தன்னார்வ பயிலும் வட்ட இயக்குநர் பி.சுரே~;குமார், முனைவர் பி.மதன், முனைவர் கே.மகே~;, முனைவர் சரோஜா, முனைவர் சி.பாஸ்கரன் ஆகியோர் தத்தம் துறைகளில் உள்ள வசதிகள் குறித்து விளக்கி பேசினர்.
இந்நிகழ்ச்சியில் 677-க்கும் மேற்பட்ட முதுகலை முதலாமாண்டு கலை மற்றும் அறிவியல் துறைகளைச் சார்ந்த மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்றனர்;. முனைவர் வி. பழனிச்சாமி, முதன்மையர் (மாணவர் நலன்) நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து