முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்து விட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்து 4-ம் நாள் சைக்கிள் பேரணியில் சிறப்பு தீர்மானம் - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேட்டி

வியாழக்கிழமை, 19 ஜூலை 2018      தமிழகம்
Image Unavailable

மதுரை : மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்து விட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஜெயலலிதா பேரவை சார்பில் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக  4-வது நாளாக சைக்கிள் பேரணி செல்லும் வழியில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார்.

109 அடியாக...

கர்நாடக மாநிலத்தில் கடந்த ஒரு மாதமாக மழை வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கிறது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்ததால் கபினி அணை நிரம்பி அதில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. பிறகு கிருஷ்ணராஜ சாகர் அணையும் நிரம்பி அதிலிருந்தும் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஆரம்பத்தில் 40 ஆயிரம் கன அடி வீதம் திறந்து விடப்பட்ட தண்ணீர் படிப்படியாக உயர்ந்து ஒரு லட்சம் கனஅடியையும் தாண்டியது. இதனால் ஒகனேக்கல் அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு அருவியையே பார்க்க முடியாத நிலை ஏற்பட்டது. இப்படி தமிழகத்திற்கு தண்ணீர் தொடர்ந்து திறந்து விடப்பட்டதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து தற்போது 109 அடியாக உள்ளது. விரைவில் இது முழு கொள்ளளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதல்வருக்கு நன்றி...

இந்த நிலையில் காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து விட்டார். இதற்கு அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அ.தி.மு.க. அரசின் சாதனை விளக்க சைக்கிள் பேரணி செல்லும் வழியில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசின் சாதனைகளை பட்டியலிட்டு 4-வது நாளாக சைக்கிள் பேரணி நடந்து கொண்டிருக்கிறது. தமிழக விவசாயிகளின் ஜீவாதார உரிமைகளில் ஒன்றான காவிரியை மீட்டெடுத்து அதற்கான உரிமையையும் அரசிதழில் வெளியிடச் செய்த அம்மாவின் வழியில் சிறப்பாக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிற முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசின் சாதனைகளை மக்களிடையே எடுத்து செல்லும் விதமாக ஜெயலலிதா பேரவை சார்பில் சைக்கிள் பேரணி 4-வது நாளாக நடந்து கொண்டிருக்கிறது.

தீர்மானம் நிறைவேற்றி...

தற்போது மேட்டூர் அணை நீர்மட்டம் 109 அடியை எட்டியுள்ளது. டெல்டா பாசன விவசாயிகளுக்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணை நீரை திறந்து விட்டுள்ளார். அவருக்கு ஜெயலலிதா பேரவை சார்பில் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம். இவ்வாறு கூறிய அவரிடம் 8 வழிச்சாலை குறித்து நடிகர் ரஜினி தெரிவித்த கருத்து குறித்து கேட்டதற்கு, நல்ல உள்ளம் கொண்ட எல்லோரும் இத்திட்டத்தை வரவேற்பார்கள் என்றார். தினகரனை பற்றி கூறிய அவர், பொய்யான வாக்குறுதி கொடுப்பவர்களுக்கு இது ஒரு நல்ல பாடம் என்று ஆர்.கே. நகர் சம்பவம் குறித்து குறிப்பிட்டார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து