முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிரிக்கெட் போட்டிகளில் இருந்து டோனி ஓய்வு பெறப்போகிறாரா? ரவிசாஸ்திரி விளக்கத்தால் ரசிகர்கள் மகிழ்ச்சி

வியாழக்கிழமை, 19 ஜூலை 2018      விளையாட்டு
Image Unavailable

லண்டன் : சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து டோனி ஓய்வு பெற திட்டமிட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் கிரிக்கெட் ரசிகர்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கு ரவிசாஸ்திரி விளக்கம் அளித்துள்ளார். அதில் டோனி ஓய்வு பெறும் திட்டம் ஏதும் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளது அவரது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விமர்சனம்...

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரில் இந்திய அணியின் விக்கெட் கீப்பரும், முன்னாள் கேப்டனுமான டோனி 2–வது ஆட்டத்தில் 59 பந்துகளில் 37 ரன்னும், கடைசி ஆட்டத்தில் 66 பந்துகளில் 42 ரன்னும் எடுத்தார். டோனியின் நிதானமான ஆட்டம் விமர்சனத்துக்கு உள்ளானது. லீட்சில் நேற்று முன்தினம் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்து தொடரையும் இழந்தது.

பந்தை கேட்டு...

தோல்வி கண்டு வீரர்கள் அனைவரும் பெவிலியன் திரும்பிய போது டோனி, நடுவரிடம் இருந்து ஒரு பந்தை கேட்டு வாங்கினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பொதுவாக போட்டி தொடரை வென்றாலோ? அல்லது சிறப்பாக பந்து வீசினாலோ வீரர்கள் ஸ்டம்ப் அல்லது பந்தை நினைவாக எடுத்து செல்லுவார்கள்.

ஓய்வு பெற...

தோல்வி அடைந்த ஆட்டத்தில் டோனி பந்தை வாங்கி சென்றதால் அவர் ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறப்போகிறாரோ? என்ற சந்தேகத்தை எழுப்பிய கிரிக்கெட் ரசிகர்கள், டோனிக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் பதிவுகளை வெளியிட்டனர். குறைந்த பட்சம்  2019-ஆம் ஆண்டு உலக கோப்பை வரையாவது டோனி விளையாட வேண்டும் என்று அவரது ரசிகர்கள் உருக்கமாக பதிவுகளை வெளியிட்டு இருந்தனர்.

முற்றுப்புள்ளி...

இந்த நிலையில், நாளிதழ் ஒன்றிற்கு பேட்டி அளித்த இந்திய அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி, டோனி  ஓய்வு குறித்து வெளியான பல்வேறு ஊகங்களுக்கு முற்றுப்புள்ளிவைத்துள்ளார்.  ரவிசாஸ்திரி கூறியதாக நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியின் படி, “எம்.எஸ்.டோனி, எங்கும் போகவில்லை. மைதானத்தின் தன்மை மற்றும் ஆடுகளம் பற்றி பொதுவான விஷயங்களை தெரிந்து கொள்வதற்காக பந்து வீச்சு பயிற்சியாளர் பரத் அருணிடம், விளையாட்டில் பயன்படுத்தப்பட்ட பந்தை காட்ட விரும்பினர். எனவே, நடுவரிடம் இருந்து டோனி பந்தை வாங்கிச்சென்றார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரவிசாஸ்திரியின் விளக்கத்தால், சில தினங்களாக பதறிப்போய் இருந்த டோனி, ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சை விட்டுள்ளனர்.

37 வயதான டோனி 2014–ம் ஆண்டில் டெஸ்ட் போட்டியில் இருந்து விடைபெற்றார். ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டியில் மட்டும் விளையாடி வருகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து