முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி.என்.பி.எல் கிரிக்கெட் லீக் : லைகா கோவை கிங்ஸ் அணியை வீழ்த்தியது திண்டுக்கல் டிராகன்ஸ்

வியாழக்கிழமை, 19 ஜூலை 2018      விளையாட்டு
Image Unavailable

திண்டுக்கல் : தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டியில் லைகா கோவை கிங்ஸ் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி வீழ்த்தியது.

பந்துவீச்சு தேர்வு...

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ் - திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதின. திண்டுக்கல் டிராகன்ஸ் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி லைகா கோவை கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் பந்துவீச்சை நிதானத்துடன் எதிர்கொண்ட லைகா கோவை கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் குவித்தது.

186 ரன்கள்...

அந்த அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரர் ஷாருக் கான் 54 பந்தில் 7 பவுண்டரி, 4 சிக்சருடன் 86 ரன்கள் குவித்தார். அக்கி ஸ்ரீநாத் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 40 பந்தில் 54 ரன்கள் எடுத்திருந்தார். இந்நிலையில், 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஹரி நிஷாந்த் மற்றும் ஜெகதீசன் ஆகியோர் இறங்கினர். ஹரி நிஷாந்த் 19 ரன்கள் அடித்திருந்த நிலையில் விக்னேஷ் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

சதுர்வேத் அபாரம்

அடுத்து களமிறங்கிய சதுர்வேத் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த மறுமுனையில் ஜெகதீசன் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சிறப்பாக விளையாடிய இவர்கள் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் விளாசினர். ஜெகதீசன் மற்றும் சதுர்வேத் இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டுக்கு 105 ரன்கள் குவித்து அணியின் வெற்றியை பிரகாசப்படுத்தினர். திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 14 ஓவரில் 148 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சதுர்வேத், 36 பந்துகளில் 6 சிக்சர்கள் மற்றும் 5 பவுண்டரிகளுடன் 72 ரன்களில் அவுட்டானார்.

திண்டுக்கல் வெற்றி...

இறுதியில் ஜெகதீசன் மற்றும் பாலச்சந்தர் அனிருத் ஆகியோரின் அதிரடியில் 17.4 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் குவித்து லைகா கோவை கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் வீழ்த்தியது. ஜெகதீசன், 50 பந்துகளில் 2 சிக்சர்கள் மற்றும் 5 பவுண்டரிகளுடன் 66 ரன்களுடனும், பாலச்சந்தர் அனிருத் 11 பந்துகளில் 2 சிக்சர்கள் மற்றும் 2 பவுண்டரிகளுடன் 25 ரன்களுடனும் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். லைகா கோவை கிங்ஸ் அணி சார்பில் விக்னேஷ் மற்றும் ராஜேஷ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுக்களை வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி புள்ளிப் பட்டியளில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து