முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விநோத வழிபாடு மூலம் நன்றி தெரிவித்த தாய்லாந்து சிறுவர்கள்

வெள்ளிக்கிழமை, 20 ஜூலை 2018      உலகம்
Image Unavailable

பாங்காக்: தாய்லாந்து குகையில் சிக்கிக் கொண்ட 12 சிறுவர்களும் சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினர். வீடு திரும்பியதும், 12 சிறுவர்களும், அவர்களது பயிற்சியாளரும் செய்த முதல் வேலை என்ன தெரியுமா?
 
குசியாங் ராய் குகைப் பகுதியில் மீட்புப் பணியின் போது, குகையில் சிக்கியிருந்தவர்களுக்குத் தேவையான பொருட்களை கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுபட்டிருந்த சமன் குணான் என்ற முன்னாள் கடல் அதிரப்படை வீரருக்கு தங்களது மரியாதையையும், நன்றியையும் தெரிவித்துக் கொண்டனர்.

தாய்லாந்து வழிபாட்டு முறைப்படி, ஒரு கயிற்றால் தங்களது கை, தலையை கட்டியபடி விநோத வழிபாட்டு முறை வாயிலாக தங்களது நன்றியை அவர்கள் தெரிவித்துக் கொண்டனர்.

தங்களை மீட்கும் பணியின் போது உயிரிழந்த சமன் குணானுக்கு அஞ்சலி செலுத்திய சிறுவர்கள், குகை மீட்புச் சம்பவம் தங்களை மேலும் வலிமையாக மாற்றியதாகவும், எந்த விஷயத்திலும் அஜாக்கிரதையாக இருக்கக் கூடாது என்பதை கற்றுக் கொடுத்திருப்பதாகவும் கூறுகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து