முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

113 வருடங்களுக்கு முன் காணாமல் போன ரஷ்ய கப்பலில் கிடைத்த தங்கப் புதையல் உரிமை கொண்டாடும் தென் கொரியா

வெள்ளிக்கிழமை, 20 ஜூலை 2018      உலகம்
Image Unavailable

சியோல்: கொரிய கடல் பகுதியில் 113 வருடங்களுக்கு முன் காணாமல் போன டிமிட்ரி டோன்ஸ்கோய் என்ற ரஷ்ய கப்பல் இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பல கோடி தங்கமும், வைரமும் அதில் இருந்தது காணப்பட்டுள்ளது. இந்த புதையல் அப்படியே தென்கொரிய மியூசியத்திற்கு கொண்டு செல்லப்பட இருக்கிறது.

இந்த கப்பல் ரஷ்யாவிற்கு சொந்தமானது. இதன் பெயர் டிமிட்ரி டோன்ஸ்கோய். 1885-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த கப்பல், ரஷ்ய - ஜப்பான் போரில், 1905-ம் ஆண்டு மே, கொரிய தீபகற்ப கடலில் செல்லும் போது மூழ்கி காணமால் போய் உள்ளது.

இந்த நிலையில் அந்த கப்பல் அதே இடத்தில் இவ்வளவு வருடங்களாக இருந்துள்ளது. கொரியாவின் தனியார் கடல் ஆராய்ச்சி நிறுவனம் இதை கண்டுபிடித்து இருக்கிறது. கொரிய கடல் பகுதியிலேயே அது இருந்துள்ளது. டீப்வொர்க்கர் 2000 என்ற குழு இந்த கப்பலை கண்டுபிடித்துள்ளனர். கடலுக்கு அடியில் 480 மீட்டர் ஆழத்தில் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

இந்த கப்பலில், மொத்தம் 5,500 பெட்டிகள் இருந்துள்ளது. இதில் முழுக்க முழுக்க தங்கம், வைரம் இருந்துள்ளது. இன்னும் சில பொருட்கள் காணாமல் போய் இருக்கிறது. இதன் இப்போதைய மதிப்பு ரூபாய் 9 லட்சம் கோடி வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.

தென்கொரிய கடல் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதால் விதிப்படி இது எங்கள் சொத்துதான் என்று தென்கொரியா கூறியுள்ளது. சர்வதேச கடல் விதிகளின்படி, இந்த புதையலை தென்கொரியா உரிமை கோர எல்லா உரிமையும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து