முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செக்காணூரணியில் அ.தி.மு.க அரசின் சாதனை விளக்க பிரச்சார சைக்கிள் பேரணிக்கு உற்சாக வரவேற்பு: பொதுக்கூட்டத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்:

வெள்ளிக்கிழமை, 20 ஜூலை 2018      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.- அ.தி.மு.க அம்மா பேரவையின் சார்பில் நடைபெற்று வரும் அ.தி.மு.க அரசின் ஓராண்டு சாதனை விளக்க பிரச்சார சைக்கிள் பேரணிக்கு மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதி செக்காணூரணி அருகேயுள்ள அ.கொக்குளத்தில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.பின்னர் அங்கு நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சரும் கழக அம்மா பேரவை மாநில செயலாளருமான ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு 300க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க அரசின் ஓராண்டு சாதனைகளை மக்கள் மத்தியில் விளக்கமாக சொல்லிடும் வகையிலும்,வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வின் வெற்றிக்கு அச்சாரமிடும் வகையிலும் கழக அம்மா பேரவை சார்பில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சரும் கழக அம்மா பேரவை செயலாளருமான ஆர்.பி.உதயகுமார் தலைமையில் 1000க்கும் மேற்பட்ட பேரவை நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றுள்ள மாபெரும் சைக்கிள் பேரணி முதல்கட்டமாக மதுரை மாவட்டத்தில் தற்போது சிறப்பாக நடைபெற்று வருகிறது.இதனிடையே நேற்று முன்தினம் இரவு திருமங்கலம் தொகுதி  செக்காணூரணி அருகேயுள்ள அ.கொக்குளத்திற்கு வருகை புரிந்த சாதனை விளக்க சைக்கிள் பேரணிக்கு பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.பின்னர் சைக்கிள் பேரணிக்கு தலைமையேற்று வந்த தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு திருமங்கலம் ஒன்றிய கழகத்தின் சார்பில் தாரை தப்பட்டை முழுங்கிட பட்டாசுகளை வெடித்து   எழுச்சிமிகு வரவேற்பு கொடுக்கப்பட்டது.
இதையடுத்து செக்காணூரணி அ.கொக்குளம் மந்தை திடலில் அம்மா அரசின் ஓராண்டு சாதனை விளக்க மாபெரும் பொதுக்கூட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது. பல்லாயிரக் கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்ட இந்த சாதனை விளக்க சைக்கிள் பேரணி பிரச்சார பொதுக்கூட்டத்தில் கழக அம்மா பேரவை செயலாளரும்,தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு திருமங்கலம் ஒன்றிய  பகுதியைச் சேர்ந்த பயனாளிகள் 300க்கும் மேற்பட்டோருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.அப்போது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது: அம்மா ஆட்சியில் இருந்தபோது மாணவ செல்வங்களுக்கு தேவையான 14 வகைளான கல்வி திட்டங்களை தந்தார்கள்.விவசாயிகளுக்கு உழவர் பாதுகாப்பு திட்டம் தந்தார்கள்.முதியோர்களுக்கு ஆயிரம் ரூபாய் உதவித் திட்டம் தந்தார்;கள்.தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் செயல்படுத்தினார்கள்.ஆனால் அம்மா நம்மை விட்டுச் சென்றதற்கு பின்னாலே அம்மாவின் புனித அரசை வழிநடத்துகிற முதல்வர் மற்றும் துணை முதல்வர் அவர்கள் அம்மாவின் கனவு திட்டங்களை மக்களுக்கு வாரி வழங்கி வருகிறார்கள்.17 மாதங்களில் எத்தனை போராட்டங்கள் வந்தாலும் அத்தனையும் சமாளித்து முதல்வரும்,துணை முதல்வரும் இதிகாச சகோதரர்களாக நமக்காக இரவு பகலும் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.இத்தகைய அம்மா அரசின் சாதனைகளை ஆடிக்காற்றை எதிர்கொண்டு 1000 இளைஞர்கள்   பங்கேற்றிடும் சைக்கிள் பேரணியின் மூலம் தாய்மார்களுக்கு எடுத்துச் சொல்லி வருகிறார்கள்.17 மாதங்களில்  கிடைக்காத காவிரியை கொண்டு வந்திட காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு விட்டது.ஆனால் அண்டை மாநிலமாக உள்ள கர்நாடகம்  முரண்டு பிடித்தபோது  இயற்கை அன்னை நமது காவிரியை   மீட்டெடுத்து தற்போது நமது முதல்வர் மேட்டூர் அணையை திறந்து வைத்து துள்ளிக் குதித்து வரும் காவிரியை மீட்டெடுத்த இரண்டாம் கரிகால் சோழனாக  நமது முதல்வர் திகழ்கிறார்.அம்மாவின் கருணையால் திருமங்கலம் அருகேயுள்ள தோப்பூரில்  எய்ம்ஸ் மருத்துவமனை அமைந்திட நடவடிக்கை மேற்கொண்டு அதில் வெற்றி பெற்றுள்ளோம்.மேலும் குடிமராமத்து திட்டம்,வண்டல் மண் வழங்கிடும் திட்டம் என ஆயிரமாயிரம் திட்டங்களை அம்மாவின் அரசு செயல்படுத்தி வருகிறது.
தற்போது  எந்த கோப்பும் கோட்டையில் தூங்குவது கிடையாது.நமது முதல்வர் கோப்புகளுக்கு உடனடியாக உயிர் கொடுக்கிறார்.நலத்திட்டங்களை உடனடியாக தொடங்கி வைக்கிறார்.புதிய திட்டங்களுக்கு அடிக்கல்நாட்டுகிறார்.மேலும் முடிவடைந்த திட்;டங்களை நேரில் சென்று தொடங்கி வைக்கிறார்.இது அம்மா கொடுத்த பயிற்சியால் சாத்தியமாகிறது.இதன் மூலம் இன்னும் 100ஆண்டுகள் மட்டுமல்ல இன்னும் 1000ஆண்டுகள் அம்மாவின் ஆட்சி நீடித்து நிலைத்திருந்து மக்கள் சேவையாற்றும் என்பதற்கு இங்கு கூடியிருக்கும் தாய்மார்களின் கூட்டமே சாட்சி.யார் கைவிட்டாலும் யார் காப்பாற்றா விட்டாலும் அம்மாவின் அரசை இங்கு கூடியுள்ள புறநானூற்று தாய்மார்கள் கூட்டம் நிச்சயமாக காவல் தெய்வங்களாக இருந்து காப்பாற்றிடும்.இன்றைக்கு 4ஆயிரம் கோடி ரூபாய் சியெட் தொழிற்சாலை,1500கோடி ரூபாய் எய்ம்ஸ் மருத்துவமனை,328 கோடி ரூபாயில் குடி மராமத்து பணிகள்,நிலத்தை பயன்படுத்திட வண்டல் மண் அள்ளிட அரசு அனுமதி என அம்மாவின் அரசு பல்வேறு வரலாற்று சாதனைகளை படைத்து வருகிறது என்று பேசினார்.இதை தொடர்ந்து சைக்கிள் பேரணியில் பங்கேற்றுள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு தலைசிறந்த பேராசிரியர்களை கொண்டு திறன் மேம்பாடு பயிற்சி மற்றும் ஆளுமைத் திறன் பயிற்சி வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.சரவணன் எம்.எல்.ஏ.,கழக அம்மா பேரவை துணைச் செயலாளர்கள் வெற்றிவேல், சதன்பிரபாகர்,மாவட்ட துணைச் செயலாளர் அய்யப்பன்,சார்பு அணி நிர்வாகிகள் ஓம்கேசந்திரன்,தமிழ்ச்செல்வம்,திருப்பதி, ஒன்றிய செயலாளர்கள் வக்கீல்.அன்பழகன், மகாலிங்கம்,ராம்சாமி,முன்னாள் திருமங்கலம் யூனியன் சேர்மன் தமிழழகன்,மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் ஆண்டிச்சாமி,கட்சி நிர்வாகிகள் கபிகாசிமாயன், பாவடியான்,கண்ணன்,அன்னகொடி, சுகுமார்,சுமதிசாமிநாதன், பழனிச்சாமி,மாணிக்கம், சாமிநாதன்,முத்துராஜா, வெங்கடேஸ்வரன் மற்றும் உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் முருகேசன்,தாசில்தார் நாகரத்தினம்,மதுரை மாவட்ட பி.ஆர்.ஓ.தங்கவேல் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து