முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேட்டூர் அணை நீர்மட்டம் 114 அடியாக உயர்வு விரைவில் முழுக் கொள்ளளவை எட்டும்

சனிக்கிழமை, 21 ஜூலை 2018      இந்தியா
Image Unavailable

மேட்டூர்: கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வந்த கன மழை காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பின. இதனால் இரு அணைகளின் பாதுகாப்புக் கருதி உபரி நீர் காவிரியில் வெளியேற்றப்படுகிறது. உபரி நீர் வரத்து காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது.

இந்த நிலையில், கர்நாடக அணைகளுக்கு வரும் நீர்வரத்துக் குறைந்தது.  இதனால் காவிரியில் உபரி நீரின் திறப்பு வெகுவாகக் குறைக்கப்பட்டது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நொடிக்கு 1,01,277 கனஅடியாக இருந்தது. நேற்று முன்தினம் காலை நொடிக்கு 59,954 கன அடியாக குறைந்தது.

இருப்பினும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் காலை 112.04 அடியாக உயர்ந்தது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 20 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 81.33 டி.எம்.சி.யாக இருந்தது.

இந்நிலையில், நேற்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்வரத்து 59,954 கனஅடியில் இருந்து 64,595 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் 112.04 அடியில் இருந்து 114.63 அடியாக உயர்ந்துள்ளது. தற்போது அணையின் நீர் இருப்பு 85.16 டி.எம்.சி.யாக உள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 20,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படுவதாலும், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிந்ததாலும், அணை நிரம்புவது தள்ளிப் போகிறது என்று பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து