முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெள்ளத்தில் சிக்கிய ரயிலை போராடி நிறுத்திய ஓட்டுநர்

சனிக்கிழமை, 21 ஜூலை 2018      இந்தியா
Image Unavailable

புவனேஸ்வர்: ஒடிசாவில் ரயில் பாதையில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அந்த வழியாக சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் தண்ணீரில் சிக்கிக் கொண்டது.

வங்க கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுபகுதியால் ஒடிசா மாநிலத்தில் நேற்று முன்தினம் முதல் மழை பெய்து வருகிறது. கடலோரா மாவட்டங்களில்  பலத்த மழை பெய்யும் என வானிலை மையம் ஏற்கெனவே எச்சரித்து இருந்தது.

இந்நிலையில் புவனேஸ்வரில் இருந்து ஜெகதல்பூர் நோக்கி சென்ற கிராகந்த் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று காலை ராயகடா மாவட்டத்தில் வெள்ளத்தில் சிக்கியது. ரயில் சென்று கொண்டிருக்கும் போது கல்யாணி ஆற்றில் திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. காற்றாற்று வெள்ளம் போல தண்ணீர் பெருக்கெடுத்து வந்தது. இதை பார்த்து அதிர்ந்து போன ரயில் ஓட்டுநர் மிகவும் சிரமமப்பட்டு ரயிலை நிறுத்தினார். தண்டவாளத்தில் வெள்ள நீர் புகுந்ததால் ரயிலை இயக்க முடியாத சூழல் ஏற்பட்டது. உடனடியாக ரயில்வே உயரதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். சற்று நேரத்திற்கு பிறகு தண்டவாளத்தில் தண்ணீர் அளவு சற்று குறைந்தவுடன் அருகே இருந்த ரயில் நிலையத்திற்கு கொண்டு செல்லபட்டு வேறு வழித்தடத்தில் அந்த ரயில் இயக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து