முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீலகிரி - கோவையில் கனமழைக்கு வாய்ப்பு

சனிக்கிழமை, 21 ஜூலை 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை: தென் மேற்கு பருவமழையின் தாக்கத்தால் கோவை மற்றும் நீலகிரி மாவட்ட மலை பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஒர் இரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதே போல் தென் மேற்கு பருவமழையின் தாக்கத்தால் கோவை மற்றும் நீலகிரி மாவட்ட மலை பகுதிகளில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

காற்றழுத்த தாழ்வு...
வட மேற்கு வங்கக்கடல் மற்றும் ஒடிசாவை ஒட்டியுள்ள கடற்பகுதியில் நிலவி இருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வழுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது. இதனால் வடமேற்கு வங்க கடல் பகுதிக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும், காற்றின் வேகம் அதிகம் இருக்கும் என்பதால் ஆழ் கடல் பகுதிகளுக்கும் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

மழைக்கு வாய்ப்பு...
கடந்த 24 மணி நேரத்ததில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் தேவாலாவில் தலா 8செ.மீட்டர் மழையும், கோவை மாவட்டம் வால்பாறை, சின்னக்கல்லரில் தலா 4செ மீட்டர் மழையும் நீலகிரி மாவட்டம் கூடலூர் பஜாதில் தலா 2 செ.மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதிகப்பட்சமாக 35 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 28 டிகிரி செல்சியஸ் பதிவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து