முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தான் தேர்தலில் தீவிரவாதிகள் போட்டி அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம்

ஞாயிற்றுக்கிழமை, 22 ஜூலை 2018      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தலில் தீவிரவாதிகள் பலர் போட்டியிடுகின்றனர். இதற்கு அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

பாகிஸ்தானில் வரும் 25-ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடை பெற உள்ளது. இந்த தேர்தலில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் மறைமுகமாக போட்டியிடுகின்றனர். லஷ்கர்-இ-தொய்பா நிறுவனரும் மும்பை தாக்குதல் வழக்கின் முக்கிய குற்றவாளியுமான ஹபீஸ் சயீதும், லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் மூத்த தலைவர்களும் அல்லா-வு-அக்பர் தெஹ்ரிக் என்ற கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிடுகின்றனர். அந்த கட்சி சார்பில் லஷ்கர் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் 150 தொகுதிகளில் வேட்பாளர்களாக கள மிறங்கியுள்ளனர்.

தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய ஏ.எஸ்.டபிள்யூ. ஜே., டி.எல்.பி. கட்சிகளும் அனைத்து தொகுதிகளிலும் வேட் பாளர்களை முன்நிறுத்தியுள்ளன.

இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவுத் துறை அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தலில் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் போட்டியிடுவது கவலையளிக்கிறது. தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும் வேட்பாளர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுகிறது. இது கோழைத்தனமானது. மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் செயலாகும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

29 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் தேர்தல் களத்தில் இருப்பது துரதிஷ்டவசமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து