முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ.க ஆட்சியில் ஏழைகளுக்கு அச்சம் மோடி அரசின் நாட்கள் எண்ணப்படுகிறது காங். காரிய கமிட்டி கூட்டத்தில் சோனியா பேச்சு

ஞாயிற்றுக்கிழமை, 22 ஜூலை 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி: மத்திய பா.ஜ.க. அரசு ஏழைகளுக்கு நம்பிக்கையற்ற மற்றும் அச்சச்தை ஏற்படுத்தி உள்ளது. மோடி அரசின் நாட்கள் எண்ணப்படுவதாக காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் சோனியா தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் புது தில்லியில் அக்கட்சித் தலைவர் ராகுல் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மூத்த தலைவர்களான சோனியா, மன்மோகன் சிங், குலாம் நபி ஆசாத், ப.சிதம்பரம் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் உட்பட கட்சியினர் கலந்து கொண்டனர். 

பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைப்பதில் ராகுலுக்கு நாம் பக்கபலமாக இருக்க வேண்டும். ஜனநாயகத்தை விட்டுக் கொடுத்து வருபவர்களிடம் இருந்து நாம் மக்களை மீட்க வேண்டும். சமீப காலங்களில் பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சு மற்றும் நடவடிக்கை மக்களிடையே விரக்தியை ஏற்படுத்தி வருகிறது. இந்த நாட்டின் ஏழைகளுக்கு இந்த ஆட்சியின் மீது நம்பிக்கையற்ற மற்றும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது மோடி அரசின் நாட்கள் எண்ணப்படுவதை காட்டுகிறது.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அதிகார மற்றும் பணபலத்தை எதிர்க்க அனைத்து எதிர்கட்சிகளும் ஒரே அணியாக ஒன்றிணைய வேண்டும். இதற்காக ஒவ்வொருவரும் தங்களின் சொந்த விருப்பு, வெறுப்புகளை ஒதுக்கி வைத்தால் மட்டுமே முடியும் என்று சோனியா காந்தி கூறியதாக அக் கட்சியின் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜீவாலா தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து