முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியில் ராகுல் தலைமையில் காங். காரிய கமிட்டி கூட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 22 ஜூலை 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி: டெல்லியில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் அக்கட்சியின் காரியக் கமிட்டி கூட்டம் நேற்று தொடங்கியது.

காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்ற பின்னர், மத்திய காரிய கமிட்டியை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கலைத்து விட்டார். அதற்குப் பதிலாக 34 உறுப்பினர்களை கொண்ட புதிய நெறிமுறை குழு அமைக்கப்பட்டது. அது தொடர்பாக விமர்சனங்கள் எழுந்த நிலையில் 51 உறுப்பினர்கள் அடங்கிய புதிய மத்திய காரிய கமிட்டியை ராகுல் காந்தி ஜூலை 17-ம் தேதியன்று நியமித்தார். இந்த காரிய கமிட்டியில் உறுப்பினர்களாக 23 பேர், நிரந்தர அழைப்பாளர்களாக 19 பேர், சிறப்பு அழைப்பாளர்களாக 9 பேர் என மொத்தம் 51 பேர் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இந்த காரிய கமிட்டியின் முதல் ஆலோசனை கூட்டம் டெல்லியில் காங்கிரஸ் கட்சித்தலைவர் ராகுல்காந்தி தலைமையில் நேற்று தொடங்கியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து