முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்தலை மனதில் வைத்தே ஜி.எஸ்.டி. வரியை குறைக்கிறார்கள்: ப.சிதம்பரம்

ஞாயிற்றுக்கிழமை, 22 ஜூலை 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி: விரைவில் 4 மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் வைத்து 100-க்கும் மேற்பட்ட பொருட்களுக்கான ஜி.எஸ்.டி. வரியை மத்திய அரசு குறைத்துள்ளது. அடிக்கடி சட்டசபை தேர்தல் வர வேண்டும் என்று ப.சிதம்பரம் கிண்டல் செய்துள்ளார்.

28-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் டெல்லியில் நடந்தது. இதில் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் 88 வகையான பொருட்களுக்கு வரி குறைக்கப்பட்டது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் குஜராத் மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு மத்திய அரசு 50 பொருட்களுக்கான வரியைக் குறைத்தது.

இந்நிலையில், இந்த ஆண்டு இறுதியில் ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் வரவிருக்கிறது. அதற்கு முன்னோட்டமாக ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

இது குறித்து ப.சிதம்பரம் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:- தற்போது நடைமுறையில் இருக்கும் ஜி.எஸ்.டி. சீரமைக்கப்படாமல் இருக்கிறது. விரைவில் ஒரே மாதிரியான ஜி.எஸ்.டி. வரிக்கு நகர வேண்டும் என்பதே என்னுடைய கருத்தாகும். அதுதான் உண்மையான ஜி.எஸ்.டி.

இந்த ஆண்டு இறுதியில் பல மாநிலங்களில் சட்டசபை தேர்தல், அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் வருகிறது. அதைக் கருத்தில் கொண்டே மத்திய அரசு ஜி.எஸ்.டி. வரியைக் குறைத்துள்ளது. பல்வேறு மாநிலங்களில் அடிக்கடி இதுபோன்று தேர்தல் நடந்தால் ஜி.எஸ்.டி. வரி அடிக்கடி குறைக்கப்பட்டு வரும். இவ்வாறு ப.சிதம்பரம் அதில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து