முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வில்வித்தை உலகக் கோப்பை: இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 22 ஜூலை 2018      இந்தியா
Image Unavailable

பெர்லின்: வில்வித்தை உலகக் கோப்பையில் இந்திய அணி ஒரு புள்ளி வித்தியாசத்தில் தங்கப் பதக்கத்தை தவற விட்டது.

ஜெர்மனியின் பெர்லின் நகரில் வில்வித்தை உலகக் கோப்பை போட்டிகள் நடந்து வருகின்றன. ஜோதி சுரேகா, முஸ்கன் கிரார், திரிஷா தேவ் ஆகியோர் அடங்கிய இந்திய அணி காம்பவுண்ட் பிரிவில் 228 - 229 என்ற புள்ளிக் கணக்கில் பிரான்ஸின் சோபி, அமெலி, சான்ட்ரா அணியிடம் தோல்வியுற்றது. தொடக்கத்தில் சிறப்பாக செயல்பட்டு இந்திய குழுவினர் இறுதியில் ஒரு புள்ளி வித்தியாசத்தில் தங்கத்தை தவற விட்டனர். 5-ம் நிலை அணியான இந்தியா அரையிறுதியில் துருக்கி 231-228 என்ற புள்ளிக் கணக்கில் வென்று இறுதிக்கு தகுதி பெற்றிருந்தது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து