முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நவாஸ் ஷெரீப்புக்கு சிறுநீரக பாதிப்பு? சிறைத்துறைக்கு மருத்துவ குழு பரிந்துரை

திங்கட்கிழமை, 23 ஜூலை 2018      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத் : சிறையில் இருக்கும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு சிறுநீரகம் செயலிழக்கும் நிலையில் உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2015-ம் ஆண்டில் பனமா ஆவணங்கள் வெளியானதைத் தொடர்ந்து, அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பும்,  அவரது குடும்பத்தினரும் முறைகேடாக சேர்த்த பணத்தை ரகசியமாக வெளிநாடுகளில் முதலீடு செய்திருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டது.

இதுதொடர்பாக நடைபெற்று வந்த ஊழல் வழக்கில் நவாஸ் ஷெரீபுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், அவரது மகள் மரியம் நவாஸூக்கு 7 ஆண்டுகளும், மருமகன் முகமது சப்தாருக்கு ஓராண்டும் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அதையடுத்து, அந்த மூவரும் ராவல்பிண்டியிலுள்ள அடிலாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், அவருக்கு பல்வேறு நோய் இருப்பதால் சிறையிலே அவருக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பாக பாகிஸ்தான் ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபுக்கு நடைபெற்ற மருத்துவ பரிசோதனையில் அவரின் சிறுநீரகம் செயலிழக்கும் நிலையில் உள்ளதாகவும் அவர் உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு மாற்றப்பட வேண்டும் எனவும் சிறைத்துறைக்கு மருத்துவ குழு பரிந்துரைத்துள்ளது என தெரிவித்துள்ளது.

எனினும், அவரின் உடல் நிலை குறித்து சிறைத்துறை அதிகாரபூர்வ தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து