முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆபத்தான பகுதிகளில் சிக்கியிருந்த தன்னார்வலர்களை மீட்ட இஸ்ரேல் அரசு

திங்கட்கிழமை, 23 ஜூலை 2018      உலகம்
Image Unavailable

டமாஸ்கஸ் : சிரியாவில் போர் நடக்கும் ஆபத்தான பகுதிகளில் சிக்கிக் கொண்டிருந்த ஒயிட் ஹெல்மெட் அமைப்பைச் சேர்ந்த தன்னார்வலர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் இஸ்ரேல் அரசு மீட்டுள்ளது.

சிரிய - ரஷ்ய கூட்டுப் படைகளின் தாக்குதலால் ஒவ்வொரு நாளும் தரைமட்டமான கட்டிடங்களில் அகப்பட்டு கிடக்கும் சிரியா மக்களை மருத்துவமனைகளில் சேர்க்கும் பணியை சிரிய உள்நாட்டுப் போர் தொடங்கிய 2014-ம் ஆண்டு முதல் மேற்கொண்டு வருகிறது ஒயிட் ஹெல்மெட்ஸ் தன்னார்வ அமைப்பு.

இந்த நிலையில் சிரியாவில் தென் பகுதியில் கடுமையான வான்வழித் தாக்குதல் நடக்கும் பகுதியில் சிக்கிக் கொண்ட ஒயிட் ஹெல்மேட்ஸ் அமைப்பைச் சேர்ந்த தன்னார்வலர்களையும் அவர்களது குடும்பங்களையும் மீட்கும்படி இஸ்ரேல் நாட்டுக்கு பிரிட்டன் போன்ற நாடுகள் வேண்டுகோள் விடுத்திருந்தன. இந்த நிலையில் சிரியாவின் தென் பகுதிகளிலிருந்து ஒயிட் ஹெல்மேட் அமைப்பைச் சேர்ந்த சுமார் 420 தன்னர்வாலர்களை இதுவரை இஸ்ரேல் மீட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து