முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி ஜந்தர்மந்தர் பகுதியில் போராட்டம் நடத்த தடை விதிக்க முடியாது: சுப்ரீம் கோர்ட்

திங்கட்கிழமை, 23 ஜூலை 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : டெல்லி ஜந்தர் மந்தர் மற்றும் போட் கிளப் பகுதிகளில் போராட்டம் நடத்துவதற்கு முழுமையாக தடை விதிக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு தேசிய பசுமை தீர்ப்பாயம் ஜந்தர் மந்தரில் போராட தடை விதித்திருந்தது. தேசிய பசுமை தீர்ப்பின் முடிவை எதிர்த்து ஆம் ஆத்மி உள்ளிட்ட பல அமைப்புகள் இத்தடையை மறுபரிசீலனை செய்யும்படி கோரியிருந்தன.

இது குறித்து நீதிபதிகள் அர்ஜன் குமார் சிக்ரி மற்றும் அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு தெரிவித்துள்ளதாவது:-

சிலருக்கு போராடுவதற்கு உரிமை உள்ளதுபோல், குடிமகன்கள் அமைதியாக வசிக்கவும் உரிமை உண்டு என்பதால் முரண்பட்ட உரிமைகளுக்கிடையில் ஒரு சமநிலையை ஏற்படுத்த வேண்டிய ஒரு தேவை இருக்கிறது.

ஜந்தர் மந்தர், போட் கிளப் போன்ற இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதற்கு முற்றிலும் தடை செய்ய முடியாது. எனவே, இது குறித்து சட்டப்பூர்வ வழிகாட்டுதல்களை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று மத்திய அரசிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து