முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசு முறை பயணமாக ஆப்பிரிக்க நாடுகளுக்கு பிரதமர் மோடி பயணம் - 200 பசு மாடுகளை பரிசளிக்க திட்டம்

திங்கட்கிழமை, 23 ஜூலை 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : ஆப்பிரிக்க நாடுகளுக்கான அரசு முறை பயணத்தின் முதற்கட்டமாக பிரதமர் மோடி இந்தியாவில் இருந்து ருவாண்டாவுக்கு நேற்று புறப்பட்டு சென்றார். 

பிரதமர் மோடி ருவாண்டா, உகாண்டா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்கு அரசு முறை பயணமாக செல்கிறார். இதன் முதற்கட்டமாக அவர் நேற்று பிற்பகல் ருவாண்டாவுக்கு புறப்பட்டு சென்றார். ருவாண்டாவுக்கு செல்லும் முதல் இந்தியப் பிரதமர் என்ற தனித்துவத்தை இந்தப் பயணம் மூலம் மோடி பெற்றுள்ளார். இதையடுத்து, உகாண்டாவுக்கு இன்று பிரதரம் மோடி செல்கிறார். கடந்த 21 ஆண்டுகளில் உகாண்டாவுக்கு செல்லும் முதல் இந்தியப் பிரதமர் மோடி ஆவார். உகாண்டா நாடாளுமன்றத்திலும் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.  இதைத் தொடர்ந்து, 10-வது பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக மோடி நாளை 25-ம் தேதி தென் ஆப்பிரிக்கா சென்றடைகிறார். பிரிக்ஸ் மாநாட்டுக்கு இடையே அவர் சீன அதிபர் ஷி ஜின்பிங்கையும் சந்தித்து பேச்சு நடத்துகிறார்.

இந்த நிலையில், அவர் ஆப்பிரிக்க நாடுகளுக்கு பசு மாடுகளை பரிசளிக்க இருக்கிறார். இங்கிருந்து இதற்காக பசு மாடுகளை ஏற்றுமதி செய்ய இருக்கிறார்கள். எல்லாம் இந்திய இன, இளம் வயது பசுக்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தம் 200 பசு மாடுகளை அவர் ருவாண்டா நாட்டிற்கு அளிக்க இருக்கிறார். ஒரு வீட்டிற்கு ஒரு மாடு என்று 200 வீடுகளுக்கு அவர் இதை அளிக்க உள்ளார். அதே போல் மக்கள் மத்தியில் பசு மாடு குறித்தும், அதன் பயன் குறித்தும் பேச உள்ளார் .

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து