முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய வெல்ல வாய்ப்பு - முன்னாள் வீரர் ஜாகீர்கான் நம்பிக்கை

திங்கட்கிழமை, 23 ஜூலை 2018      விளையாட்டு
Image Unavailable

மும்பை : இந்தியாவின் வேகப்பந்துவீச்சு பலமாக இருப்பதால் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெல்ல வாய்ப்பு இருப்பதாக முன்னாள் வேகப்பந்து வீரர் ஜாகீர்கான் கூறியுள்ளார்.

பயிற்சி ஆட்டம்

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 20 ஓவர் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கிலும், ஒரு நாள் தொடரை இங்கிலாந்து 2-1 என்ற கணக்கிலும் கைப்பற்றின. இந்தியா- இங்கிலாந்து இடையே 5 டெஸ்ட் போட்டி நடக்கிறது. முதல் டெஸ்ட் போட்டி வருகிற 1-ந்தேதி நாட்டிங்காமில் தொடங்குகிறது. டெஸ்ட் தொடருக்கு முன்பு இந்தியா எசக்ஸ் அணியுடன் 4 நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது. இந்த ஆட்டம் நாளை தொடங்குகிறது.

நன்றாகவே உள்ளது...

இந்த நிலையில் இந்தியாவின் வேகப்பந்துவீச்சு பலமாக இருப்பதால் டெஸ்ட் தொடரை வெல்ல வாய்ப்பு இருப்பதாக முன்னாள் வேகப்பந்து வீரர் ஜாகீர்கான் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

இந்தியாவின் பவுலிங் வரிசை மிகவும் பலமாக இருக்கிறது. உமேஷ் யாதவ் நன்றாக வீசுகிறார். இஷாந்த் சர்மா, சீனியர் வேகப்பந்து வீரர் முகமது ‌ஷமியும் நல்ல சாதனையில் இருப்பார்கள். புவனேஷ்வர் குமாரும், பும்ராவும் முதல் டெஸ்டில் ஆடாவிட்டாலும் இந்தியாவின் வேகப்பந்துவீச்சு நன்றாகவே இருக்கிறது.
சிறப்பாக ஆடும்...

5 டெஸ்ட் தொடர் என்பதால் நீண்ட நாட்கள் நடைபெறும். அனைத்து பவுலர்களும் தொடர்ந்து உடல் தகுதியுடன் இருப்பது அவசியம். இந்த டெஸ்ட்டில் தொடர்ந்து இந்திய அணி சிறப்பாக ஆடும் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா, முகமது‌ ஷமி, பும்ரா, ‌ஷர்துல் தாகூர் ஆகிய 5 வேகப்பந்து வீரர்கள் உள்ளனர். இதில் பும்ரா உடல் தகுதியுடன் இல்லை. இஷாந்த், உமேஷ், முகமது ‌ஷமி ஆகிய 3 பேர், 11 பேர் கொண்ட அணியில் இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் விக்கெட் கீப்பர் ரி‌ஷப் பந்துக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று முன்னாள் கேப்டனும், இந்திய ‘ஏ’ அணியின் பயிற்சியாளருமான ராகுல் டிராவிட் வலியுறுத்தி உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து