முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவில் அறிமுகமாவிருக்கும் பறக்கும் கார்

செவ்வாய்க்கிழமை, 24 ஜூலை 2018      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : தற்போது அமெரிக்காவில் பறக்கும் கார் நிஜத்திலேயே அறிமுகமாகிறது. விரைவில் முழுமையாக மக்கள் பயன்பாட்டுக்கு வரும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கனடிய நிறுவனமான ஓபனர் தயாரித்துள்ள ‘ப்ளாக் ஃப்ளை’என்ற பறக்கும் கார்கள் அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் அறிமுகமாகிறது. இந்தக் காரை ஓட்ட பைலட் லைசென்ஸ் தேவையில்லை, ஆனால் இதை இயக்க சில பிரத்யேக பயிற்சிகளையும், இதற்கென வடிவமைக்கப்பட்டுள்ள தேர்வுகளை எழுதி வெற்றி பெற வேண்டும்.

தானாகவே இயங்கும்படியும் இது அமைக்கப்பட்டுள்ளது இதற்கு முன்னர் தயாரிக்கப்பட்ட பறக்கும் கார்களின் விலை மிக அதிகம். ஆனால் தற்போது குறைந்த விலையில், மணிக்கு 62 மைல்கள் வேகத்தில் இயங்கும் இந்தக் கார் அனைவரின் கவனத்தை கவரும் என்பது நிச்சயம்.

12000 மைல்கள் பறந்து டெஸ்ட் ட்ரைவ் முடிந்த நிலையில் உள்ள இந்த ப்ளாக் ஃப்ளை ஒருவர் மட்டுமே அமர்ந்து பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. வீட்டுத் தோட்டத்தின் புல் தரையிலிருந்து கூட இந்தக் காரை டேக் ஆஃப் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து