முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிரீஸ் காட்டுத்தீயில் சிக்கி 24 பேர் பலி

செவ்வாய்க்கிழமை, 24 ஜூலை 2018      உலகம்
Image Unavailable

ஏதென்ஸ் : கிரீஸ் நாட்டில் காட்டுத்தீயில் சிக்கி 24 பேர் உயிரிழந்துள்ளனர்.100பேர் காயமடைந்துள்ளனர்.

கிரீஸ் நாட்டின் தலைநகர் ஏதென்ஸ் நகரின் அருகே உள்ள கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரையோரங்களில் உள்ள வனப்பகுதிகளில் காட்டுத்தீ ஏற்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து அங்குள்ள கடற்கரை பகுதியில் உள்ளவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஏதென்ஸ் நகருக்கு கிழக்கே 29 கிலோ மீட்டர் தொலைவில் மேட்டி என்ற பகுதியில் சாலையில் 4 பேர் உயிரிழந்து கிடந்து உள்ளனர் என அதிகாரிகளால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், காட்டுத்தீயில் சிக்கி 24 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 100பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

தீயை கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் 30 தீயணைப்பு வாகனங்களுடன் 70க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். அந்நாட்டில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயால் காட்டுப் பகுதிகளில் உள்ள வீடுகள் முழுவதும் சேதமடைந்து உள்ளன. போக்குவரத்து பாதிப்படைந்து உள்ளது. பொது மக்கள் தஞ்சம் தேடி வேறு இடங்களுக்கு தப்பியோடி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து