முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ருவாண்டாவுக்கு 200 மில்லியன் டாலர் கடன் இந்தியா சார்பில் வழங்கப்படும் - பிரதமர் மோடி அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 24 ஜூலை 2018      உலகம்
Image Unavailable

ருவாண்டா : ஆப்பிரிக்க நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய பிரதமர் மோடி  ருவாண்டாவுக்கு 200 மில்லியன் டாலர் கடன் இந்தியா சார்பில் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

கிழக்கு ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்தியப் பிரதமர் மோடியை அந்நாட்டு அதிபர் பால் ககமே விமானம் நிலையம் சென்று வரவேற்றார்.

இதனைத் தொடர்ந்து இந்தியா - ருவாண்டா இடையே நிலவும் உறவு குறித்து இரு தலைவர்களும் ஆலோசனையில் ஈடுபட்டனர். வர்த்தகம் மற்றும் வேளாண் துறைகளில் இரு நாடுகளின் ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்துவதன் முக்கியதுவம் குறித்து இந்த ஆலோசனையில் முக்கிய அங்கம் பெற்றது.

மேலும் இந்தச் சந்திப்பில் இரு தலைவர்களும் வேளாண் சார்ந்த பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர். வேளாண் மற்றும் தொழில் துறையில் ருவாண்டாவுக்கு இந்தியா சார்பில் 200 மில்லியன் டாலர் கடன் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

இதன் பிறகு இரு நாட்டுத் தலைவர்களும் செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றனர். இதில் பிரதமர் மோடி பேசும்போது, "ருவாண்டாவின் பொருளாதாரத்தில் இந்தியா உதவுவதை நான் கவுரமாகப் பார்க்கிறேன். தொடர்ந்து ருவாண்டாவின் வளர்ச்ச்சிக்கு இந்தியா உதவும். ருவாண்டாவில் இந்தியா தனது பணியை விரைவில் தொடங்கவுள்ளது" என்று தெரிவித்தார். ருவாண்டாவுக்கு பயணம் செய்த முதல் பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து