முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆடி பண்டிகையை முன்னிட்டு அரசு சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனையினை அமைச்சர்கள் .செல்லூர்.கே.ராஜூ ஓ.எஸ்.மணியன் துவக்கி வைத்தனர்

புதன்கிழமை, 25 ஜூலை 2018      மதுரை
Image Unavailable

 மதுரை,-மதுரை மாவட்டம், ஜடாமுனி கோயில் தெருவில் உள்ள எல்.என்.எஸ் இல்லத்தில் ஆடி பண்டிகையை முன்னிட்டு அரசு அரசு சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனையினை மாவட்ட ஆட்சித்தலைவர்  கொ.வீர ராகவ ராவ்,   முன்னிலையில்,   கூட்டுறவுத்துறை அமைச்சர்  செல்லூர்.கே.ராஜு தலைமையில்,   கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர்  ஓ.எஸ்.மணியன்     முதல் விற்பனையினை துவக்கி வைத்து தெரிவிக்கையில்
 கைத்தறி நெசவாளர்களால் உற்பத்தி செய்யப்படும் கைத்தறி ஜவுளி இரகங்களின் உற்பத்தி மற்றும் விற்பனைiயினை மேம்படுத்துவதற்காக கைத்தறி மற்றும் கோ-ஆப்டெக்ஸ் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு எவ்வித தேக்க நிலை இல்லாமல் விற்பனை செய்யும் பொருட்டு இந்த கைத்தறி விற்பனை கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  இக்கண்காட்சியில் ரூ.15 கோடி மதிப்பிலான காஞ்சிபுரம்,  ுவனம் மற்றும்  ண்ணாமலை சரகங்களின் பட்டு சேலைகள், சேலம் வெண்பட்டு வேட்டிகள், ஈரோடு, சென்னிமலை பெட்சீட், டவல், தலையணை உறைகள், மதுரை சுங்கடி, கோடம்பாக்கம் இரக சேலைகள், காட்டன் வேட்டிகள், கைலிகள், பரமக்குடி, திண்டுக்கல் மற்றும் விருதுநகர் சரக காட்டன் சேலைகள், கோவை சரக மென்பட்டு சேலைகள் அனைத்தும் ஒரே இடத்தில் நுகர்வோர்கள் வாங்கிப் பயன்பெறும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
 பட்டு இரகங்களுக்கு 20மூ முதல் 65மூ வரை சிறப்பு தள்ளுபடியும், பருத்தி இரகங்களுக்கு 20மூ தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.  சென்ற ஆண்டு ரூ.2 கோடி வரை விற்பனை செய்யப்பட்டது.  இந்தாண்டு ரூ.2.5 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  வாடிக்கையாளர்களுக்கு இக்கண்காட்சிக்கு வருகை புரிந்து கைத்தறி மற்றும் பட்டு ரகங்களை வாங்கி கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.  ஆடி பண்டிகை 2018 முன்னிட்டு மத்திய அரசு உதவியுடன் கைத்தறி மற்றும் துணிநூல் துறையால் சிறப்பு கண்காட்சி மற்றும் விற்பனை இன்று (25.07.2018) முதல் 07.08.2018ம் தேதி வரை எல்.என்.எஸ் இல்லம், 24 ஜடாமுனி கோயில் தெருவில் நடைபெறுகிறது.  இக்கண்காட்சி காலை 10.30 மணி முதல் இரவு 9.00 மணி வரை நடைபெறவுள்ளது. 
 வெளிநாட்டில் வசிப்பவர்கள் தமிழகத்தில் உள்ள கைத்தறி நெசவாளர்களால் உற்பத்தி செய்யப்படும் தூயபட்டுச்சேலைகள், கைத்தறி சோலைகள், காட்டன் சேலைகளை ஆன்-லைன் வர்த்தகம் மூலம் வாங்கி பயன்பெறும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது.  இதன் மூலம் தமிழக பட்டு சேலைகள், காட்டன் சேலைகளின் தரத்தினை உலகறியச் செய்வதற்கு நல்ல வாய்ப்பாக அமைகிறது என தெரிவித்தார்.
 இந்நிகழ்ச்சியில் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர்  கே.மாணிக்கம், கைத்தறி மற்றும் துணிநூல் துறை உதவி இயக்குநர்  எஸ்.சையத் தாவூத் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து