முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நத்தம் அருகே வறட்சியிலும் பூத்துக்ங்கி குலுங்கும் செண்டு மல்லி பூக்கள்

புதன்கிழமை, 25 ஜூலை 2018      திண்டுக்கல்
Image Unavailable

 நத்தம்,-திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே செந்துறை . மணக்காட்டூர்,மங்களப்பட்டி,
சின்னராசிபுரம்,சிரங்காட்டுப்பட்டி, குரும்பபட்டி, பிள்ளையார்நத்தம், கோசுகுறிச்சி உள்ளிட்ட பல கிராமப் பகுதிகளில் தோட்டப்பயிர்களாவும், இறைவைசாகுபடியாகவும் மானவாரியாகவும், சென்ட்மல்லி என்னும் கேந்திப்பூக்கள் எனவும் அழைக்கப்படும் பூ வகையை விவசாயிகள் பயிரிட்டு உள்ளனர். தற்போது கடும் வறட்சியாக இருந்தாலும் இந்த பூ வகை பூத்துக்குலுங்கி கண்களை கவரும் வகையில் காணப்படுகிறது.இந்தப் பூக்களை விவசாயிகள் அறுவடை செய்து விற்பனை செய்து வருகின்றனர். ஒரு கிலோ ரூ.10 முதல் 20 வரை விலைபோகிறது. உற்பத்தி செலவைக்காட்டிலும் வருவாய் குறைந்து காணப்படுகிறது. இதனால் பூ விவசாயிகள் பெரிதும் கவலை கொ,ண்டுள்ளனர். கோவில் விழாக்கள் தவிர மற்ற திருமண விழாக்கள் ஏதும் கிடையாது. .வருகிற காலங்களில் போதுமான விலை கிடைக்குமென்ற நம்பிக்கையில் உள்ளனர். ஒரு கிலோ குறைந்தது ரூ.50 விற்றால்தான் இந்த பூவிற்கு கட்டுபடியாகும் என்று மேலும் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து