முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிர்மலா சீதாராமன் குருபூர்ணிமா வாழ்த்து

வெள்ளிக்கிழமை, 27 ஜூலை 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: குரு பூர்ணிமா தினத்தை முன்னிட்டு குருவை வணங்குவோம் என்று நிர்மலா சீதாராமன் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

ஆடி மாதத்தில் வரும் பவுர்ணமியானது குரு பூர்ணிமா என்று அழைக்கப்படுகிறது. இந்த நாளில் தனக்கு கல்வி புகட்டிய, வழிகாட்டிய குருமார்களை போற்றும் விதமாக குரு பூஜை செய்து வழிபடுவது வழக்கம். குருவை வணங்கி ஆசி பெறுவதுடன், தட்சிணாமூர்த்தி, பகவத் கீதை அருளிய கிருஷ்ணர், வேதங்களை தொகுத்த வியாசர், உபநிடதங்களுக்கு விளக்கம் எழுதிய ஆதி சங்கரர், மத்வர் மற்றும் இராமானுஜர் போன்றவர்களையும் குரு பூர்ணிமா நாளில் வழிபட்டு குருவின் திருவருள் பெறுவது மரபு.

அவ்வகையில் இந்த ஆண்டிற்கான குரு பூர்ணிமா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. குறிப்பாக தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

குருபூர்ணிமா தினத்தை முன்னிட்டு பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்து உள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-
குரு பூர்ணிமா நாள். நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நமக்கு நேர்மறையான சிந்தனைகளையும் வார்த்தைகளையும் தருகின்ற சரியான செயல்களுடன் நம்மை வழிநடத்துகின்ற ஒவ்வொரு குருவுக்கும் மரியாதை செலுத்துவோம். இந்த குரு பூர்ணிமா நன்னாளில் குருவின் அருள் நமக்கு எப்போதும் கிடைக்கட்டும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து